Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோபத்தில் ஆதாரங்களை வெளியிட்டார்.. கடைசியில் ரோஹித் சர்மாவே இப்படி செய்துவிட்டாரே.. அதிர்ச்சி!

Recommended Video

World Cup 2019: Rohit Sharma's wicket: ரோஹித் விக்கெட்டில் சர்ச்சை.. நடந்தது என்ன?- வீடியோ

லண்டன்: நேற்று தனக்கு வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய விக்கெட் குறித்து இந்திய வீரர் ரோஹித் சர்மா டிவிட் செய்து இருக்கிறார்.

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நேற்று அதிரடியாக வென்றது. நேற்று 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 268 ரன்கள் எடுத்தது. மேற்கு இந்திய தீவுகள் 34.2 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்களுக்கு சுருண்டது.

இந்த போட்டியில் ரோஹித் சர்மா அவுட்டான முறை பெரிய சர்ச்சையானது. இதில் மேற்கு இந்திய தீவுகளின் 5வது ஓவரை ரோச் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ரோஹித் எதிர்கொண்டார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

அப்போது ரோச் போட்ட பந்து ரோஹித்தின் காலுக்கும் பேட்டிற்கும் இடையில் சென்றது. இதற்கு ரோச் அவுட் கேட்டார். ஆனால் நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இதனால் மேற்கு இந்திய தீவுகள் ரிவ்யூ கேட்டது. பந்து சரியாக பேட்டிற்கும் காலிற்கும் இடையில் சென்றது. அதே சமயம் பேட் மற்றும் கால் இரண்டுக்கும் இடையில் பந்து செல்லும் போதும் அதிர்வு ஏற்பட்டது. மூன்றாவது நடுவர் ரோஹித்திற்கு விக்கெட் கொடுத்தார்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

பந்து பேட்டில்தான் பட்டது என்று கூறி கோலி ரோஹித்திற்கு விக்கெட் கொடுத்தார். ஆனால் பந்து உண்மையில் பேட்டில் படவில்லை. பந்து காலில்தான் பட்டது என்பது குறிப்பிடத்தக்கது . இதை பார்த்து ரோஹித் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஏன் கோபம்

ஏன் கோபம்

இந்த நிலையில் இது தொடர்பாக ரசிகர்கள் பலர் டிவிட்டர் உள்ளிட்ட வலைத்தளங்களில் கோபமாக கமெண்ட் செய்து இருந்தனர். ரோஹித் சர்மாவிற்கு கொடுக்கப்பட்ட விக்கெட் விக்கெட்டே கிடையாது. வர வர மிக மோசமாக நடுவர்கள் செயல்படுகிறார்கள். ஐசிசி இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிவிட் செய்து வருகிறார்கள்.

ரோஹித் சர்மா டிவிட்

தற்போது இதுகுறித்து ரோஹித் சர்மாவே டிவிட் செய்து இருக்கிறார். அவர் தான் விக்கெட் ஆகாத புகைப்பட ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். அதில் தலையில் அடித்துக்கொள்ளும் மற்றும் கண்ணை உற்று பார்க்கும் எமோஜியை போட்டு ஐசிசியை கிண்டல் செய்து இருக்கிறார்.

இல்லை

இல்லை

பொதுவாக வீரர்கள் தாங்கள் அவுட் ஆவதை, அதன் சர்ச்சையை இப்படி வெளிப்படையாக டிவிட் செய்ய மாட்டார்கள். ஆனால் ரோஹித் சர்மாவே இப்போது இப்படி செய்து இருக்கிறார். அவர் கோபம் நியாயம்தான் , அவர் போஸ்ட் செய்ததும் நியாயம்தான் என்று ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Story first published: Friday, June 28, 2019, 16:39 [IST]
Other articles published on Jun 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+