Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன சதி இது?.. அவர் அவுட்டே கிடையாது.. ரோஹித் விக்கெட்டில் சர்ச்சை.. நடந்தது என்ன?

Recommended Video

WORLD CUP 2019: IND VS WI | மே. இந்திய தீவுகளுக்கு எதிராக பேட்டிங் இறங்கும் இந்தியா- வீடியோ

லண்டன்: இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மா அவுட்டான விதம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு எதிராக இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய மற்றும் மேற்கு இந்திய தீவுகளுக்கு இடையில் தற்போது உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடந்து வருகிறது. மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

இந்த போட்டி நடக்கும் ஓல்ட் டிரபோர்ட் கிரிக்கெட் மைதானம் பேட்டிங் பிட்ச். இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி நிதானமாக ஆடி வருகிறது.

என்ன நிதானம்

என்ன நிதானம்

இந்திய அணி எப்போதும் முதல் 10 ஓவர்களில் எப்படி நிதானமாக ஆடுமோ அதேபோல்தான் இந்த போட்டியிலும் நிதானமாக ஆடியது. ரோஹித் சர்மா, கே எல் ராகுல் இருவரும் தேவையான பந்துகளை மட்டுமே அடித்தனர். முதல் மூன்று ஓவர்களில் இந்திய அணி வெறும் 6 ரன்களை மட்டும் எடுத்து இருந்தது.

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

இந்த நிலையில் 5வது ஓவரை ரோச் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ரோஹித் எதிர்கொண்டார். அப்போது ரோச் போட்ட பந்து ரோஹித்தின் காலுக்கும் பேட்டிற்கும் இடையில் சென்றது. இதற்கு ரோச் அவுட் கேட்டார். ஆனால நடுவர் விக்கெட் கொடுக்கவில்லை. இதனால் மேற்கு இந்திய தீவுகள் ரிவ்யூ கேட்டது.

என்ன சொன்னது

என்ன சொன்னது

அதன்பின் மூன்றாவது நடுவர் இதை சோதனை செய்து பார்த்தார். அப்போது பந்து சரியாக பேட்டிற்கும் காலிற்கும் இடையில் சென்றது. பந்து காலில் உரசுவது எல்லோருக்கும் தெரிந்தது. அதே சமயம் பேட் மற்றும் கால் இரண்டுக்கும் இடையில் பந்து செல்லும் போதும் அதிர்வு ஏற்பட்டது. இதனால் பந்து பேட்டில் பட்டதா காலில் பட்டதா என்று கணிக்க முடியவில்லை.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் மூன்றாவது நடுவர் ரோஹித்திற்கு விக்கெட் கொடுத்தார். பந்து பேட்டில்தான் பட்டது என்று கூறி கோலி ரோஹித்திற்கு விக்கெட் கொடுத்தார். இதை பார்த்து ரோஹித் அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்ன கருத்து

என்ன கருத்து

இதற்கு எதிராக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக செய்யப்பட்ட சதி. எப்படி இதை விக்கெட் என்று மூன்றாவது நடுவர் சொல்லலாம் என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

Story first published: Thursday, June 27, 2019, 16:26 [IST]
Other articles published on Jun 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+