For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி கொஞ்சம் வேகமாக ஆடி இருக்கலாம்? மறைமுகமாக தாக்கிய ரோஹித் சர்மா.. அணிக்குள் புதிய வில்லங்கம்!

இந்திய அணியின் முன்னணி வீரர் தோனியை துணை கேப்டன் ரோஹித் சர்மா மறைமுகமாக கிண்டல் செய்து பேசிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

லண்டன்: இந்திய அணியின் முன்னணி வீரர் தோனியை துணை கேப்டன் ரோஹித் சர்மா மறைமுகமாக கிண்டல் செய்து பேசிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை போட்டி இன்று நடக்க உள்ளது. இந்தியா ஏற்கனவே செமி பைனலுக்கு தேர்வாகிவிட்டது.

ஆனால் இன்று நடக்கும் போட்டியில் வெற்றிபெற்றால் இந்தியா பெரும்பாலும் புள்ளி பட்டியலில் முதலிடம் பெற வாய்ப்புள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்.

ரோஹித் சர்மா என்ன

ரோஹித் சர்மா என்ன

ரோஹித் சர்மா அளித்த பேட்டியில், இந்திய அணி மிகவும் வலுவாக இருக்கிறது. செமி பைனலுக்கு பின் எங்களது பேட்டிங் அணுகுமுறை வேறு மாதிரி இருக்கும். இப்போதுவரை தொடரில் நாங்கள்தான் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறோம். அது செமி பைனலிலும் தொடரும் என்று நம்பிக்கை உள்ளது.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

எங்கள் அணி 300-350 ரன்களை எடுப்பதில் சில சிக்கல்கள் இருக்கிறது. கடைசியில் இறங்கி 40 பந்தில் 70 ரன்களை அடிக்கும் வகையில் எங்கள் அணிக்கு வீரர்கள் தேவை. பாண்டியா நன்றாகவே ஆடுகிறார். அவர் அதிரடியாக ஆடி வருகிறார். ஆனால் அவரால் பெரிய இலக்குகளை எடுக்க முடியவில்லை.

இல்லை

இல்லை

ஆனால் இங்கிலாந்து அணி அப்படி கிடையாது. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி போட்டியில் பென் ஸ்டோக்ஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடினார். அதுவரை ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. அவர் போட்டியை மாற்றிவிட்டார். அவரை போல கடைசி நேரத்தில் அதிரடியாக ஆட எங்கள் அணியில் ஆட்கள் இல்லை, என்று கூறியுள்ளார்.

என்ன சர்ச்சை

என்ன சர்ச்சை

இந்த நிலையில் ரோஹித் சர்மா தோனியைத்தான் இப்படி மறைமுகமாக விமர்சனம் செய்கிறார் என்று பலர் விமர்சகர்கள் கூறி உள்ளார்கள். கடைசி நேரத்தில் இந்திய அணியின் ரன் ரேட் குறைவதற்கு தோனிதான் காரணம். அதைத்தான் ரோஹித் சர்மா மறைமுகமாக கிண்டல் செய்கிறார்கள் என்று கூறுகிறார்கள்.

Story first published: Saturday, July 6, 2019, 7:52 [IST]
Other articles published on Jul 6, 2019
English summary
ICC World Cup 2019: Rohit Sharma takes a dig at Dhoni's slow innings for the first time.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+