Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

என்ன விதி இது.. உடனே மறுபரிசீலனை செய்யுங்கள்.. கொதித்தெழுந்த ரோஹித் சர்மா.. பின்னணி இதுதான்!

Recommended Video

WORLD CUP 2019 FINALS | இங்கிலாந்தின் வெற்றிக்கு எதிராக பொங்கும் பிரபலங்கள்- வீடியோ

லண்டன்: ஐசிசி பயன்படுத்தி வரும் சில விதிகளை இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா கடுமையாக கண்டித்து இருக்கிறார்.

இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து தோல்வி அடைந்து இங்கிலாந்து வென்றது.

இங்கிலாந்து இதன் மூலம் முதல்முறை உலக சாம்பியனாகி உள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளை இழந்து 50 ஓவரில் 241 ரன்கள் எடுத்தது. இதில் சூப்பர் ஓவர் மூலம் பவுண்டரி கணக்கில் இங்கிலாந்து கோப்பையை வென்றது.

என்ன இடம்

என்ன இடம்

இந்த போட்டியில் நியூசிலாந்து வீசிய ஐம்பதாவது ஓவரில் 15 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இங்கிலாந்து ஆடிக்கொண்டு இருந்தது. போல்ட் வீசிய அந்த ஓவரின் 4 வது பந்தில் 2 ரன்கள் எடுக்க இங்கிலாந்து வீரர்கள் ஓடினார்கள். அப்போது நியூசி வீரர் குப்தில் பந்தை சரியாக தடுத்து தூக்கி கீப்பரிடம் வீசினார். ஆனால் அது ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டு ஓவர் த்ரோவாக மாறி பவுண்டரி சென்றது. இதனால் அந்த பந்தில் 6 ரன்கள் தேவையின்றி சென்றது.

என்ன கேள்வி

என்ன கேள்வி

இந்த நிலையில் எப்படி இதற்கு 6 ரன்கள் வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. பந்து ஓவர் த்ரோ மூலம் பவுண்டரி செல்லவில்லை. ஸ்டோக்ஸ் பேட்டில் பட்டுதான் பவுண்டரி சென்று இருக்கிறது. இதற்கு எப்படி பவுண்டரி கொடுத்தார்கள் என்று கேள்வி எழுந்துள்ளது.

இன்னொரு கேள்வி

இன்னொரு கேள்வி

அதேபோல் கடைசியில் சூப்பர் ஓவரில் போட்டியின் முடிவு தெரியவில்லை. சூப்பர் ஓவரில் இரண்டு அணிகளும் ஒரே ரன்களை எடுத்தது. கடைசியில் பவுண்டரி கணக்கின்படி இங்கிலாந்து வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதுவும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. எப்படி பவுண்டரி கணக்கை வைத்து முடிவை தீர்மானிக்கலாம் என்று பலர் கேட்கிறார்கள்.

ரோஹித் சர்மா

இப்படி தொடர்ச்சியாக ஐசிசி விதிகள் எல்லாம் சர்ச்சைக்கு உள்ளானதை அடுத்து தற்போது இந்திய அணியின்

துணை கேப்டன் ரோஹித் சர்மா அதுகுறித்து டிவிட் செய்துள்ளார். அதில், சில ஐசிசி விதிகளை நாம் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று அவர் கூறியுள்ளார்.

Story first published: Monday, July 15, 2019, 16:45 [IST]
Other articles published on Jul 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+