Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இறுதிப்போட்டியில் கூட இப்படியா.. ஏன் இப்படி சதி செய்கிறீர்கள்?.. மைதானத்தில் நிகழ்ந்த சர்ச்சை!

Recommended Video

WORLD CUP 2019 FINALS NZ VS ENG | இறுதிப்போட்டியிலும் இப்படியா? ஏன் சதி செய்கிறீர்கள்?

லண்டன்: இங்கிலாந்து நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்கும் உலகக் கோப்பை போட்டியில் நடுவர் செய்த தவறு ஒன்று பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உலகக் கோப்பை போட்டிகள் முடியும் தருவாயை எட்டிவிட்டது. தற்போது உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடந்து வருகிறது.

இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் போட்டி நடந்து வருகிறது. இதில் தொடக்கத்தில் நிதானமாக ஆடிய நியூசிலாந்து தற்போது வரிசையாக விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.

மூன்று விக்கெட்டுகள்

மூன்று விக்கெட்டுகள்

தொடக்கத்திலேயே மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி திணறிக்கொண்டு இருந்தது. மார்ட்டின் குப்தில், கேன் வில்லியம்சன், ஹென்றி நிக்கோலஸ் என்று வரிசையாக மூன்று முக்கிய வீரர்களும் அவுட்டானர்கள். ஆனால் ரோஸ் டெய்லர் மட்டும் நிதானமாக ஆடிக்கொண்டு இருந்தார்.

ரோஸ் டெய்லர் எப்படி

ரோஸ் டெய்லர் எப்படி

இந்த நிலையில் ரோஸ் டெய்லர் மார்க் வுட் போட்ட 34 ஓவரின் முதல் பந்தில் அவுட்டானார். எல்பிடபிள்யூ முறையில் ரோஸ் டெய்லர் அவுட்டானார். ஆனால் அங்கு இருந்த எல்லோருக்கும் ரோஸ் டெய்லர் அவுட் இல்லை என்பது தெரிந்தது.

இல்லை

இல்லை

ஆம் பந்து லைனில் குத்தாமல் வெளியில் குத்தியது. அதோடு, பந்து ஸ்டம்பிற்கு மேலே சென்றது. ஸ்டம்பில் லேசாக கூட படவில்லை. இது ரிப்ளேயில் நன்றாக தெரிந்தது. இதற்கு அம்பயர் காலும் கேட்க முடியாது. ரோஸ் டெய்லர் ரிவ்யூ எடுத்து இருந்தால் கண்டிப்பாக இது நாட் அவுட்தான். ஆனால் நியூசிலாந்து அணியிடம் அப்போது ரிவ்யூ இல்லை.

தெரிந்து சென்றார்

தெரிந்து சென்றார்

நியூசிலாந்து வீரர் மார்டின் குப்தில் ஏற்கனவே தனது எல்பிடபிள்யூவிற்கு ரிவ்யூ எடுத்தார். ஆனால் அப்போதி நியூசிலாந்து அணி ரிவ்யூவை இழந்து விட்டது. இதனால் ரோஸ் டெய்லர் தான் விக்கெட் இல்லை என்று தெரிந்தும் நடுவர் செய்த தவறால் பெவிலியன் செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டது. ரோஸ் டெய்லர் நியூசிலாந்து அணியின் மிக முக்கியமான வீரர் ஆவார். இது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

பலர் கோபம்

பலர் கோபம்

இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க நடுவர்கள் பல முறை இப்படி தவறு செய்தார்கள். முக்கியமான வீரர்கள் நடுவர்களின் தவறால் விக்கெட்டை இழந்தனர். இந்த நிலையில் இறுதிப்போட்டியில் கூட இப்படி தவறான விக்கெட் கொடுக்கப்பட்டு இருப்பது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஐசிசி நடுவர்களுக்கு எதிராக பலர் குரல் கொடுத்து வருகிறார்கள்.

Story first published: Sunday, July 14, 2019, 19:00 [IST]
Other articles published on Jul 14, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+