Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏதாவது அதிசயம் நடந்தால்தான் உண்டு.. மிக மோசமான நிலையில் ஜாம்பவான் அணி.. செமி வாய்ப்பு பறிபோகிறது!

லண்டன்: இந்த உலகக் கோப்பையில் கப் அடிக்க வாய்ப்புள்ள அணி என்று கருதப்பட்ட முக்கியமான அணி ஒன்று செமி பைனலுக்கு நுழைவதே சந்தேகம்தான் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கிலாந்தில் தற்போது மழை பெய்வதும் குறைந்துள்ளதால், போட்டிகள் எல்லாம் தடை பெறாமல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த தொடரில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் மிகவும் வலுவான அணிகளாக இருக்கிறது. அதற்கு அடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் வலுவான அணியாக இருக்கிறது.

என்ன மோசம்

என்ன மோசம்

இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்கும் முன் 4 அணிகள் மீதுதான் கிரிக்கெட் வல்லுநர்கள் கவனம் செலுத்தினார்கள். ஆனால் அந்த 4 அணியில் நியூசிலாந்து இடம்பெறவில்லை. இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள்தான் உலகக் கோப்பையை வெல்ல போகிறது என்று எல்லோரும் கருத்து தெரிவித்து இருந்தனர்.

காரணம் என்ன

காரணம் என்ன

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆர்டர் இரண்டும் நல்ல வலுவாக இருந்தது. இளம் வீரர்கள், நல்ல அனுபவ வீரர்கள், இளம் பவுலிங் படை, நல்ல மிடில் ஆர்டர் என்று தென்னாப்பிரிக்கா அணியில் எல்லாமே நன்றாகவே இருந்தது. ஆனால் அந்த அணி இந்த உலகக்கோப்பையில் இவ்வளவு வலுவாக இருந்தும் பெரிய அளவில் ஏமாற்றங்களை அளித்து வருகிறது.

 தொடர் தோல்வி

தொடர் தோல்வி

இந்த தொடர் முழுக்க தென்னாப்பிரிக்கா அணி வரிசையாக தோல்வியை தழுவி வருகிறது. இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை தென்னாப்பிரிக்கா அணி மொத்தம் 6 போட்டிகளை விளையாடி இருக்கிறது. இதில் 1 போட்டி மழையால் தடைபட்டது. ஒரு போட்டியில் மட்டும் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது. அதுவும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி.

மிக மோசம்

மிக மோசம்

மற்ற அனைத்து போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி மோசமாக தோல்வி அடைந்து உள்ளது. மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தென்னாப்பிரிக்கா அணி வங்கதேசம் அணிக்கு எதிராகவும் தோல்வி அடைந்துள்ளது. தற்போது புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி 8வது இடத்தில் இருக்கிறது. நேற்று நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்தது.

வாய்ப்பில்லை

வாய்ப்பில்லை

தற்போது தென்னாப்பிரிக்கா அணி செமி பைனலுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் பெரிய அளவில் குறைந்துவிட்டது. ஏதாவது அதிசயம் நடந்து, இங்கிலாந்து, இந்தியா போன்ற அணிகள் எல்லாம் வரிசையாக தோல்வி அடைந்தால் மட்டுமே தென்னாப்பிரிக்கா செமி பைனலுக்கு செல்ல முடியும். ஆனால் அப்படி எல்லாம் அதிசயம் நடக்க வாய்ப்பே இல்லை.

ரொம்ப பாவம்

ரொம்ப பாவம்

இதனால் உலகக் கோப்பை தொடரில் வரலாற்றில் இல்லாத படுதோல்வியை தென்னாப்பிரிக்கா இந்த முறை சந்திக்க போகிறது. இதனால் உலகக் கோப்பை போட்டிக்கு பின் அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Thursday, June 20, 2019, 13:37 [IST]
Other articles published on Jun 20, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+