அவருக்கு ரகசியம் தெரிந்துவிட்டதா? தோனி பற்றி சச்சின் செய்த டிவிட்டால் சர்ச்சை.. மீண்டும் பிரச்சனை
Recommended Video
லண்டன்: தோனியின் பிறந்த நாளுக்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் செய்த டிவிட் பெரிய சர்ச்சையாகி உள்ளது.
உலகக் கோப்பை 2019 தொடர் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் நடந்து வருகிறது. உலகின் நான்கு வலிமையான அணிகள் சரியாக செமி பைனலுக்கு தகுதி பெற்றுள்ளது.
இந்தியா ஒரே ஒரு போட்டியில் தோல்வி அடைந்து, கெத்தாக புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இந்த தொடர் முழுக்க இந்திய அணியில் முக்கியமான பிரச்சனை ஒன்று நிலவி வந்தது. தற்போது அந்த பிரச்சனை மீண்டும் வெளியே வந்துள்ளது.

என்ன பிரச்சனை
உலகக் கோப்பை தொடரில் வரிசையாக பல போட்டிகளில் தோனி மிகவும் பொறுமையாக ஆடினார். ஆப்கானிஸ்தான் போட்டியில் தோனி சரியாக ஆடவில்லை. இதனால் சச்சின் தோனியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். தோனி ஒரு மூத்த வீரர். அதற்கு ஏற்றபடி அவர் ஆட வேண்டும். கொஞ்சம் பாசிட்டிவாக அவர் ஆட வேண்டும். தோனி பொறுப்பாக ஆட வேண்டும், மெதுவாக ஆட கூடாது, என்று சச்சின் குறிப்பிட்டார்.

சர்ச்சை ஆனது
சச்சினின் இந்த கருத்து பெரிய சர்ச்சையானது. பலர் தோனிக்கும் சச்சினுக்கு இடையில் பெரிய பிரச்சனை நிலவுகிறது என்று கூறி இருந்தனர். ரசிகர்களும் மாறி மாறி சண்டை போட்டனர். இந்த நிலையில் தோனி பதவி விலக போகிறார். இந்த உலகக் கோப்பை தொடர்தான் அவருக்கு கடைசி தொடர். இந்த தொடரின் இறுதியில் அவர் ஓய்வு பெறுவார் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் வந்தது.
மீண்டும் வைரல்
இந்த நிலையில் சச்சின் நேற்று தோனியின் பிறந்த நாள் அன்று செய்த டிவிட் பெரிய சர்ச்சையாகி உள்ளது. அதில் பிறந்த நாள் வாழ்த்துகள் தோனி. இந்த வருடம் சிறப்பாக அமைய வாழ்த்துகள். அடுத்த இரண்டு போட்டிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள் என்று சச்சின் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் இந்த டிவிட்தான் சர்ச்சையாகி உள்ளது.

பிரச்சனை
ஏன் சச்சின், தோனியின் அடுத்த இரண்டு போட்டிக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அப்படி என்றால் அதுதான் தோனியின் கடைசி இரண்டு போட்டிகளா? சச்சினுக்கு தோனியின் ஓய்வு ரகசியம் தெரிந்துதான் அப்படி வாழ்த்து தெரிவித்தாரா என்று பல ரசிகர்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். இந்த டிவிட் மீண்டும் சச்சின் தோனி ரசிகர்களுக்கு இடையில் சண்டையை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications