Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இது முடிவல்ல.. இதுதான் தொடக்கம்.. கணவனின் ஓய்வு குறித்து உருகிய சானியா.. வைரல் போஸ்ட்!

லண்டன்: கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் ஓய்வு பெற்றது குறித்து அவரின் மனைவி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா செய்த போஸ்ட் பெரிய வைரலாகி உள்ளது.

நேற்று பாகிஸ்தான் அணியின் மூத்த வீரர் சோயப் மாலிக் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதன் மூலம் அவரின் 20 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவிற்கு வந்துள்ளது.

நேற்று வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு உருக்கமான விடை கொடுக்கப்பட்டது. பாகிஸ்தான் வீரர்கள் சிலர் இவருக்கு கண்ணீருடன் விடை கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எப்போது

எப்போது

இவர் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக 1999ல் அறிமுகம் ஆனார். அப்போதில் இருந்து இப்போதுவரை பாகிஸ்தான் அணிக்காக பல்வேறு தொடர்களில் விளையாடி உள்ளார். பாகிஸ்தானின் பல்வேறு கேப்டன்களுக்கு கீழேயும் அவர் விளையாடி உள்ளார்.

நீண்ட சாதனை

நீண்ட சாதனை

இவர் இதுவரை 287 ஒருநாள், 35 டெஸ்ட், 111 டி 20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பின் அடிக்கடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் சானியா மிர்சா விமர்சனம் செய்யப்படும் நிகழ்வு நடந்து வருகிறது.

போஸ்ட்

இந்த நிலையில் தன்னுடைய கணவர் சோயப் மாலிக் ஓய்வு குறித்து தற்போது சானியா மிர்சா இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார். அதில், எல்லா கதைக்கும் ஒரு முடிவு இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் எல்லா முடிவிற்கும் பின்பும் ஒரு புதிய தொடக்கம் இருக்கும். மாலிக், நீங்கள் உங்கள் நாட்டிற்காக 20 வருடம் பெருமையுடன் விளையாடினீர்கள்.

பாராட்டு

பாராட்டு

பணிவுடன் உங்கள் நாட்டிற்காக நீங்கள் தொடர்ந்து விளையாடினீர்கள். நானும், இஷானும் உங்களையும், உங்கள் சாதனைகளையும் நினைத்து பெருமைப்படுகிறோம், என்று மிகவும் உருக்கமாக போஸ்ட் செய்துள்ளார். அவரின் இந்த போஸ்ட் இணையம் முழுக்க வைரலாகி உள்ளது. இந்தியர்களும் அவரின் போஸ்ட்டை பாராட்டி கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Story first published: Saturday, July 6, 2019, 12:21 [IST]
Other articles published on Jul 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+