Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அணியிலிருந்து அவரை நீக்குங்கள்.. மீண்டும் சர்ச்சைக்குரிய டிவிட் செய்த மும்பை புள்ளி.. கொந்தளிப்பு!

லண்டன்: இந்திய அணியில் முக்கியமான மும்பை புள்ளி ஒருவரால் தொடர்ந்து நிறைய பிரச்சனைகள், சண்டைகள் நடந்து வருகிறது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று செமி பைனல் போட்டி நடக்க உள்ளது. இதில் வெற்றிபெறும் அணி பைனலுக்கு செல்லும் என்பதால் இன்றைய போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் இந்திய அணிக்குள் தேவையில்லாமல் ஒரு பிரச்சனை கடந்த இரண்டு வாரங்களாக தொடர்ந்து நடந்து வருகிறது. வர்ணனையாளர் சஞ்சய் மஞ்சிரேக்கரால் தொடர்ந்து இந்திய அணியில் பிரச்சனை நிலவி வருகிறது.

 மிக மோசம்

மிக மோசம்

மும்பையை சேர்ந்த சஞ்சய் மஞ்சிரேக்கர் திமிருடன் பேசி பேசியே பிரபலமாகி இருக்கிறார். சொற்ப போட்டிகளில் விளையாடி, சொற்ப ரன்களை எடுத்திருக்கும் சஞ்சய் மஞ்சிரேக்கர் முன்னணி வீரர்களை மிக வன்மமாக வர்ணனை செய்வார். மும்பையை சேராத வீரர்களை இவர் மோசமாக வர்ணிப்பார்.

 எல்லோரும்

எல்லோரும்

கோலி, ஜடேஜா, தோனி என்று பலரை இவர் மோசமாக வர்ணனை செய்து பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். இந்த நிலையில் இவர் கடந்த இந்தியா வங்கதேசம் போட்டியின் போது இந்திய வீரர் ஜடேஜாவை ''உதிரி விக்கெட்டுகள், ரன்களை எடுக்கும் வீரர்'' என்று கிண்டலாக அவமானப்படுத்தினார். இது பெரிய சர்ச்சையானதை அடுத்து பலர் மஞ்சிரேக்கரை விமர்சனம் செய்து இருந்தனர்.

இப்போது என்ன

இந்த நிலையில் தற்போது இந்திய அணியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து மஞ்சிரேக்கர் டிவிட் செய்துள்ளார். அதில், பிட்சிற்கு ஏற்றவாறு, இந்திய அணியில் மீண்டும் கேதார் ஜாதவை கொண்டு வர வேண்டும். அதுதான் நல்லது . மற்ற ஸ்பின் பவுலர்கள் மிக மோசமாக பந்து வீசி இருக்கிறார்கள், என்று இவர் சில புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளார்.

 ஆனால் என்ன

ஆனால் என்ன

அதில் சாஹல், குல்தீப், ஜடேஜா ஆகியோர் இந்த 2019 உலகக் கோப்பையில் பந்து வீசிய புள்ளி விவரங்களை மஞ்சிரேக்கர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஜடேஜா ஒரே ஒரு போட்டியில்தான் பந்து வீசி இருக்கிறார். அவரை போய் எப்படி மற்ற வீரர்களின் புள்ளி விவரங்களுடன் ஒப்பிட்டு பார்க்க முடியும். இது எந்த விதத்தில் நியாயம் ஆகும். கேதார் ஜாதவும் பெரிதாக சிறப்பாக பந்து வீசவில்லை.

 மோசம்

மோசம்

ஜடேஜா மீது கோபம் இருந்தால் அதை வெளிப்படையாக சொல்ல வேண்டும். அதை விட்டுவிட்டு ஏன் கேதார் ஜாதவை அணிக்குள் எடுக்க சொல்கிறீர்கள். நீங்கள் என்ன பெரிய அணி தேர்வாளரா? என்று பலர் மஞ்சிரேக்கரை கேள்விகளால் துளைத்து இருக்கிறார்கள். மஞ்சிரேக்கர் தன்னை விட கோலிக்கு கிரிக்கெட் அறிவு கொஞ்சம் ஜாஸ்தி என்பதை எப்போது உணரப்போகிறாரோ தெரியவில்லை!

Story first published: Tuesday, July 9, 2019, 12:05 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+