Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒரே பாலில் நிகழ்ந்த 2 அதிசயம்.. இரண்டையும் கோட்டை விட்ட பாக். கேப்டன்.. வைரல் வீடியோ!

Recommended Video

WC 2019: Eng Vs Pak: ஒரே பாலில் இரண்டு வாய்ப்பை தவறவிட்ட பாகிஸ்தான் கேப்டன்- வீடியோ

லண்டன்: நேற்று பாகிஸ்தான் இங்கிலாந்து அணிகள் மோதிய போட்டியில் மிக முக்கியமான நேரத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் விக்கெட் எடுக்கும் வாய்ப்புகளை இரண்டு முறை தவறவிட்டு இருக்கிறார்.

நேற்று பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. முதல் போட்டியில் வென்ற மகிழ்ச்சியில் இங்கிலாந்து களமிறங்கியது.

முதலில் மோசமாக தோல்வி அடைந்த விரக்தியில் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் இமாம் உல்ஹக் 44, பாபர் அசாம் 63, முகமது ஹபீஸ் 84, சர்ப்ராஸ் அஹமது 55 ரன்கள் எடுத்தனர்.

சூப்பர்

சூப்பர்

போட்டி முழுக்க பாகிஸ்தான் அணி அதிரடியாக ஆடியது. 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு பாகிஸ்தான் அணி 348 ரன்கள் எடுத்தது. கிறிஸ் வோக்ஸ், மெயின் அலி தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். மார்க் வுட் 2 விக்கெட் எடுத்தார்.

என்ன வாய்ப்பு

என்ன வாய்ப்பு

நேற்று இந்த போட்டியின் இங்கிலாந்து அணி கொஞ்சம் நிதானமாக ஆடி வந்தது. அப்போது பாகிஸ்தானின் பவுலர் சதாப் கான் 41 வது ஓவரை வீசினார். அந்த ஓவரில் சரியாக மெயின் அலி கீப்பர் மற்றும் கேப்டன் சர்ப்ராஸ் அஹமதுவிடம் கேட்ச் கொடுத்தார். அந்த கேட்ச் மிக எளிமையான கேட்ச் ஆகும். ஆனால் அதை சர்ப்ராஸ் அஹமது பிடிக்க தவறினார்.

மிக மோசம்

மிக மோசம்

அவர் அப்போது கையில் சரியாக கிளவுஸை மாட்டவில்லை. இதனால் சர்ப்ராஸ் அஹமது அந்த எளிதான கேட்சை நழுவ விட்டார். அதே பந்தில் மெயின் அலி தவறி லைனுக்கு வெளியே சென்றார். சர்ப்ராஸ் அஹமதுக்கு எதிரேதான் அந்த பந்து கிடந்தது. அதை வேகமாக எடுத்து இருந்தால் சர்ப்ராஸ் அஹமது மெயின் அலியை விக்கெட் எடுத்து இருக்க முடியும்.

ஆனால் இல்லை

ஆனால் சர்ப்ராஸ் அஹமது அந்த எளிய வாய்ப்பையும் தவற விட்டார். ஒரே பாலில் அதிசயமாக கிடைத்த இரண்டு நல்ல வாய்ப்பை அவர் நழுவ விட்டார். இந்த மோசமான கீப்பிங் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.

தோல்வி அடைந்தது

தோல்வி அடைந்தது

இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நன்றாகவே ஆடியது, அணியின் பார்ட்னர்ஷிப்பும் நன்றாகவே இருந்தது . ஆனால் குறிப்பிட்ட இடைவெளியில் அந்த அணி வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வந்தது. ஜோஸ் பட்லர், ஜோ ரூட் இருவரும் அணியில் செஞ்சுரி அடித்தார்கள். இது இல்லாமல் ஜானி பிரைஸ்டோ 32 ரன்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து அணி 334 ரன்கள் எடுத்து 14 ரன்களில் அந்த அணி, பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்தது.

Story first published: Tuesday, June 4, 2019, 13:52 [IST]
Other articles published on Jun 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+