Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரோஹித், இயானுக்கு அதிர்ச்சி தந்த ஹீரோ.. அவர்தான் மேன் ஆப் தி சீரிஸ்.. இப்போதே கொடுத்து விடுங்கள்!

Recommended Video

WORLD CUP 2019 | SHAKIB AL HASAN | ரோஹித், இயானுக்கு அதிர்ச்சி தந்த ஷாகிப் அல் ஹசன்- வீடியோ

லண்டன்: இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் யாருமே எதிர்பார்க்காத ஒரு வீரர் மேன் ஆப் தி சீரிஸ் பட்டம் பெற போகிறார் என்று கணிப்புகள் வெளியாகி இருக்கிறது. வெறும் இங்கி பிங்கி பாங்கி போட்டு இந்த கணிப்பை வெளியிடவில்லை, 31 போட்டிகளில் வீரர்கள் செயல்பட்ட விதத்தை வைத்து இந்த கணிப்பு வெளியாகி உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐந்து அணிகளை சேர்ந்த வீரர்கள்தான் அதிக ரன்களை குவித்து இருக்கிறார்கள். முக்கியமான 5 வீரர்கள்தான் பெரும்பாலும் அந்த அணிகளின் வெற்றிக்கு காரணமாக இருந்து வந்துள்ளனர்.

ரோஹித் சர்மா, கேன் வில்லியம்சன், இயான் மோர்கன், டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் என்று ஐந்து வீரர்கள்தான் இந்த உலகக் கோப்பையில் மிக சிறப்பாக ஆடி வருகிறார்கள். ஆனால் இவர்கள் எல்லோரையும் ஆல் ரவுண்டர் ஒருவர் அப்படியே தூக்கி சாப்பிட்டுவிட்டார் என்றுதான் கூற வேண்டும்.

வேறு யார்

வேறு யார்

அவர் வேறு யாரும் இல்லை, வங்கதேச ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன்தான். இந்த உலகக் கோப்பை தொடரில் விளையாடும் அனுபவம் மிகுந்த வீரர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் 4வது முறையாக உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறார். சில வீரர்கள் மட்டுமே இந்த முறை 4வது தடவையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறார்கள்.

எப்படி விளையாடுகிறார்

எப்படி விளையாடுகிறார்

32 வயதாகும் ஷாகிப் இந்த தொடரின் சிறந்த ஆல் ரவுண்டர். அவர் தனது வாழ்நாள் பார்மில் தற்போது இருக்கிறார். இதுவரை விளையாடிய ஆறு போட்டிகளில் ஒரு போட்டியில் கூட இவர் மோசமாக ஆடிவிட்டார் என்று கூற முடியாது. அந்த அளவிற்கு அவர் களமிறங்கிய போட்டிகள் எல்லாம் அசத்தலோ அசத்தல். ஆம் ஒரு போட்டியில் கூட இவர் வங்கதேச ரசிகர்களை ஏமாற்றவில்லை.

செம பாஸ்

செம பாஸ்

இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் இவர் 476 ரன்களை எடுத்துள்ளார். அதில் 2 செஞ்சுரி, மூன்று அரை சதம் அடக்கம். இது மட்டுமில்லாமல் இவர் 10 விக்கெட்டுகள் வேறு எடுத்துள்ளார். 6 போட்டிகளில் மூன்று போட்டியில் இவர் ஆட்டநாயகன் விருதும் வாங்கியுள்ளார். இந்த உலகக் கோப்பை தொடரில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்திருக்கும் வீரர் என்றால் அது ஷாகிப் அல் ஹசன்.

மாஸாக ஆடிவருகிறார்

மாஸாக ஆடிவருகிறார்

வங்கதேசம் அணியின் ரட்சகராக மாறி இவர் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது இவர் உலகக் கோப்பையில் டாப் ஸ்கோரர் போட்டியில் இவர் இருக்கிறார். அதேபோல் நேற்று ஆப்கானிஸ்தான் போட்டியில் இவர் அரை சதம் அடித்ததோடு மட்டுமில்லாமல், 5 விக்கெட்டுகளை எடுத்தார். கபில் தேவ், யுவராஜ் சிங் மட்டுமே இந்த சாதனையை செய்துள்ளனர். இவர்கள் மூவரை தவிர உலகக் கோப்பையில் எந்த ஆல் ரவுண்டரும் செய்யாத சாதனை இது.

காயம் விடுதலை

காயம் விடுதலை

கடந்த ஒரு மாதம் முன் இவர் காயம் காரணமாக கஷ்டப்பட்டு வந்தார். ஆனால் தற்போது அதிலிருந்து விடுபட்டு இவர் தீவிரமாக ஆடி வருகிறார். அதேபோல் இவர் 3ம் இடத்தில் இறங்கினால் கண்டிப்பாக சதம் அடிக்கிறார். அதில் மட்டும் இவர் 58.06 ரன்களை ஆவரேஜாக அடித்துள்ளார். இந்த உலகக் கோப்பையின் இவரின் வங்கதேச அணி சரியாக விளையாடினால் கண்டிப்பாக இவருக்கு தொடர் நாயகன் விருது கிடைக்க வழியுள்ளது.

Story first published: Tuesday, June 25, 2019, 11:26 [IST]
Other articles published on Jun 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+