அவர் வேறு நாட்டிற்காக ஆடி இருந்தால் கொண்டாடப்பட்டிருப்பார்.. அங்கீகாரம் கிடைக்காத தனி ஒருவன்!

லண்டன்: உலகக் கோப்பை 2019 தொடரில் மிக சிறப்பாக ஆடியும் கூட முக்கியமான வீரர் ஒருவர் இன்னும் பெரிய அளவில் உலக கிரிக்கெட்டில் அங்கீகாரம் கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார்.

இந்த உலகக் கோப்பை தொடர் பல விசித்திரங்களை கொண்டது. சென்ற 2015 தொடரில் அடித்து கலக்கிய ஸ்மித் இந்த தொடரில் பெரிய அளவில் ஆட முடியாமல் திணறுகிறார். வருடம் முழுக்க சதங்களை அடித்த கோலி இந்த தொடரில் ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்.

தோனி எப்போதும் இல்லாமல் இப்போதுதான் அதிகம் திணறுகிறார். இத்தனைக்கும் மத்தியில் யாருமே எதிர்பார்க்காமல் ஒரு வீரர் உலகையே தன் பக்கம் திருப்பி உள்ளார்.

யார் அவர்

யார் அவர்

அந்த வீரர் யாரும் கிடையாது.. வங்கதேசம் அணியின் ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன்தான் அந்த சூப்பர் ஸ்டார் வீரர். ஆம் இந்த 2019 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் ஸ்டார் யார் என்றால் அது கண்டிப்பாக ஷாகிப் அல் ஹசன்தான். தனது வங்கதேசம் அணியை தனி ஆளாக வெற்றிகளை நோக்கி தொடர்ந்து நகர்த்தி சென்றவர்தான் ஷாகிப். இந்த தொடர் முழுக்க எல்லா அணிகளுக்கு எதிராகவும் இவர் ஆதிக்கம் செலுத்தினார்.

எப்படி இவர்

எப்படி இவர்

வங்கதேச ஆல் ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் கொல்கத்தா அருகே இருக்கும் வங்கதேசத்தின் சிறிய கிராமமான மவுரா என்ற இடத்தில் பிறந்தார். 17 வயதில் இவர் கிளப் அணியில் ஆடியதை பார்த்த வங்கதேச அணி நிர்வாகிகள், நேரடியாக இவரை தேசிய அணியில் சேர்ப்பதற்கான பயிற்சியில் களமிறங்கினார்கள். 2004ல் பயிற்சியை தொடங்கிய இவர் 2006ல் வங்கதேசம் அணியின் அண்டர் 19 அணியில் சேர்ந்தார்.

அப்போது தொடங்கிய பயணம்

அப்போது தொடங்கிய பயணம்

அப்போது தொடங்கிய இவரின் பயணம் இப்போது வரை முடிவில்லாமல் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கிறது. இவர் ஆடிய உலகக் கோப்பை தொடர்களில் இதுதான் அவரின் பெஸ்ட் தொடர் என்று கூட கூறலாம். தனது வாழ்நாள் பார்மில் அவர் இருக்கிறார் என்று கூட அடித்துக் கூற முடியும். இதுவரை 201 ஒருநாள், 55 டெஸ்ட், 73 டி 20 போட்டிகளில் இவர் விளையாடி இருக்கிறார்.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

2006-2008தான் இவரின் கிரிக்கெட் வாழ்க்கையில் மிக முக்கியமான வருடங்கள். அதன்பின் இப்போது நல்ல பார்மில் உள்ளார். பெரும்பாலும் இவர் அடுத்த உலகக் கோப்பை தொடரில் விளையாடுவாரா என்று தெரியாது. அப்போதும் இதேபோல் இவர் நல்ல பார்மில் இருப்பாரா என்று தெரியாது. ஆனால் இந்த தொடர் அவருக்கானது.

ஏன் வேறுபாடு

ஏன் வேறுபாடு

இவர் ரோஹித் சர்மா, வார்னர் ஆகியோரிடம் இருந்து வேறுபட காரணம் இருக்கிறது.

1. ரோஹித், வார்னருக்கு கிடைத்தது போல உலக தரமான பயிற்சி இவருக்கு இல்லை.

2. இவர் பவுலிங்கும் செய்து எல்லா போட்டியிலும் 2 விக்கெட் வீதம் எடுக்கிறார். இரண்டுக்கு சேர்த்து நீண்ட நேரம் பயிற்சி எடுக்கிறார்.

3. இவர் அணியே இவரை நம்பித்தான் இந்த தொடர் முழுக்க விளையாடியது.

4. சம்பளம் குறைவு.

பெரிய அழுத்தம்

பெரிய அழுத்தம்

ஒவ்வொரு போட்டியிலும் இவருக்கு பெரிய அளவில் அழுத்தம் இருந்தது. ஆனால் அனைத்தையும் சமாளித்து இவர் தொடர்ந்து அதிரடியாக ஆடினார். இந்த தொடர் முழுக்க 9 போட்டிகளில் ஆடிய இவர் 606 ரன்களை எடுத்துள்ளார். இவர்தான் இப்போது இந்த தொடரில் அதிகப்பட்ச ரன்கள் எடுத்த வீரர். 10 விக்கெட்டுகளை எடுத்தார். வங்கதேசம் அணியின் வெற்றிக்கு இவர்தான் பல முறை காரணமாக இருந்தார்.

நம்பர் 1

நம்பர் 1

இவர் உலகின் நம்பர் ஒன் ஆல் ரவுண்டராக இருக்கிறார். கடந்த 10 வருடமாக நம்பர் 1 ஆல் ரவுண்டர் என்ற சிம்மாசனத்தில் மாறி மாறி இவர் அமர்ந்து வருகிறார். உலகில் வேறு ஒரு நாட்டை சேர்ந்த வீரர் இவ்வளவு திறமையோடு இருந்திருந்தால் பெரிய அளவில் கொண்டாடப்பட்டு இருப்பார். ஆனால் கோலி, தோனி, ஸ்மித்தை உலகம் கொண்டாடும் அளவிற்கு ஹசனுக்கு பெரிய அளவில் வரவேற்பு இப்போதும் கூட கிடைக்கவில்லை என்பதே கசப்பான உண்மை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

English summary
ICC World Cup 2019: Bangladesh all-rounder Shakib Al Hasan is the best player in the series undoubtedly.
Story first published: Saturday, July 6, 2019, 9:36 [IST]
Other articles published on Jul 6, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Mykhel sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Mykhel website. However, you can change your cookie settings at any time. Learn more