Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவ்வளவு கோபத்தை பார்த்ததே இல்லை.. அவமானங்களுக்கு இடையில் சாதனை படைத்த ஹீரோ அவர்!

லண்டன்: இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷமி பல்வேறு அவமானங்களுக்கு இடையில் கூட இந்திய அணிக்காக தொடர்ந்து விக்கெட்டுகளை எடுத்து வருகிறார். உலகக் கோப்பையில் வேகமாக விக்கெட் எடுக்கும் வீரர்கள் லிஸ்டில் இவர் முதலிடம் பிடிக்க உள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா இங்கிலாந்து இடையே உலகக் கோப்பை லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்திய அணியின் பவுலிங்கை இங்கிலாந்து வீரர்கள் துவைத்து தொங்க போட்டு இருக்கிறார்கள் . மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்து கலங்கடித்து உள்ளது.

ஷமி

ஷமி

ஆனாலும் இந்த ஆட்டத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தியது என்று பார்த்தால் அது ஷமியும், பும்ராவும்தான். ரன் கொடுப்பதை ஒரு பக்கம் பும்ரா கட்டுப்படுத்தினார். இன்னொரு பக்கம் வரிசையாக ஷமி விக்கெட்டுகளை எடுத்தார். இந்த போட்டியில் ஷமி ஆடிய ஆட்டம் ருத்ர தாண்டவம் என்றுதான் கூற வேண்டும்.

எத்தனை விக்கெட்

எத்தனை விக்கெட்

முதலில் மூன்று ஓவர்கள் போட்ட ஷமி பின் 30 ஓவர்கள் தாண்டிய பின் மீண்டும் ஓவர் போட்டார். அந்த ஓவரில் அவர் பிரைஸ்டோ விக்கெட்டை எடுத்தார். அதற்கு அடுத்து அவர் போட்ட 34வது ஓவரில் மீண்டும் மோர்கன் விக்கெட்டை எடுத்தார். பின் 45வது ஓவரில் ஜோ ரூட் விக்கெட்டை எடுத்தார். பின் 46 வது ஓவரில் ஜோஸ் பட்லர் விக்கெட்டை எடுத்தார். கடைசியாக 48வது ஓவரில் கிரிஸ் வோக்ஸ் விக்கெட்டை எடுத்தார்.

முக்கியமான வீரர்கள்

முக்கியமான வீரர்கள்

இந்த போட்டியில் அவர் 5 விக்கெட் எடுத்தார். 6.90 ரன் ரேட் என்று 69 ரன்கள் கொடுத்தார். சென்ற இரண்டு போட்டிகளில் இவர் 4 மற்றும் 4 என்று 8 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த உலகக் கோப்பையில் ஸ்டார்க்தான் வேகமாக விக்கெட் எடுத்து வருகிறார். இன்னும் இரண்டு போட்டிகளில் ஷமி அவரையே முந்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நிறைய பிரச்சனை

நிறைய பிரச்சனை

ஷமிக்கு நிறைய பிரச்சனை இருக்கிறது. அணிக்குள்ளேயே அவர் புறக்கணிக்கப்படுவதாக புகார்கள் இருக்கிறது. அவருக்கு வீட்டிலும் கூட பிரச்சனை உள்ளது. ஆனால் அனைத்தும் மீறி இந்திய அணிக்காக விக்கெட்களை எடுத்து தள்ளும் ஹீரோவாக அவர் உருவெடுத்துள்ளார்.

Story first published: Sunday, June 30, 2019, 19:36 [IST]
Other articles published on Jun 30, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+