Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ப்ப்பா என்னா டிவிஸ்ட்.. கடைசி ஓவரில் சொல்லி வைத்து தூக்கிய ஷமி.. தெறிக்கவிட்ட ஷாக்கிங் ஹாட் டிரிக்!

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | Shami Hatrick | கடைசி ஓவரில் சொல்லி வைத்து தூக்கிய ஷமி

லண்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி திரில்லிங் வெற்றி பெற்று இருக்கிறது. கடைசி ஓவரில் ஷமி போட்ட ஒரு ஓவர் மொத்தமாக ஆட்டத்தை புரட்டிப்போட்டது என்றுதான் கூற வேண்டும்.

வாவ் இதுதான் மேட்ச்.. என்ன ஒரு திரில்.. என்ன ஒரு சுவாரசியம். இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா பாகிஸ்தான் கூட இந்த தொடரில் இந்த அளவிற்கு டப் கொடுக்கவில்லை. ஆனால் ஆப்கானிஸ்தான் கொஞ்ச நேரத்தில் மரண பயத்தை காட்டிவிட்டது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற இந்த வெற்றி என்பது மிக மிக மிக முக்கியமான வெற்றி. கடைசி வரை போராடி இந்தியா பெற்ற இந்த வெற்றி, இந்த தொடரில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த போகிறது.

வெற்றி

வெற்றி

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த இந்தியா மொத்தமாக 50 ஓவர் பிடித்த இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 224 ரன்கள்தான் எடுத்தது. அதன்பின் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் வெறும் 4 ரன்கள் மட்டும் எடுத்து, 11 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.

கடைசி ஓவர்

கடைசி ஓவர்

இதில் கடைசி ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த போட்டி முழுக்கவே அவர் நன்றாகத்தான் பந்து வீசி இருந்தார். இந்த நிலையில் கடைசி ஓவரில் முதல் பந்தே அவர் பவுண்டரி கொடுத்து அதிர்ச்சி அளித்தார். எந்த பந்தை எப்போது சிக்ஸுக்கு அனுப்பலாம் என்று காத்துக் கொண்டு இருந்தார். அந்த ஓவரின் அடுத்த பால் டாட் பால் ஆனது.

ஹாட்ரிக் விக்கெட்

ஹாட்ரிக் விக்கெட்

அதற்கு அடுத்த பந்துதான் இந்த உலகக் கோப்பை போட்டியில் மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது. ஷமி போட்ட பந்தை லாங் ஆன் திசையில் சிக்ஸ் அடிக்க பார்த்தார் நபி. ஆனால் அதை அசால்ட்டாக கேட்ச் பிடித்து ஆட்டம் போட்டார் பாண்டியா.. இதுதான் முதல் பிகில்.

அடுத்து என்ன

அடுத்து என்ன

அதற்கு அடுத்த பந்தே ஷமி அப்தாப் ஆலமிற்கு பந்து போட்டார். நேராக மிடில் ஸ்டம்பை பார்த்தது யார்க்கர் எறிந்தார். 143 கிமீ வேகத்தில் வந்த இந்த பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. இது இரண்டாவது பிகில். அதற்கு அடுத்து பந்து அடுத்த டிவிஸ்ட்.. இரண்டு பந்தில் இரண்டு சிக்ஸ் அடித்தால் வெற்றி என்று களமிறங்கிய முஜீப் உர் ரஹ்மானுக்கு அதேபோல் லெக் ஸ்டம்பை பார்த்து யார்க்கர் போட்டார் ஷமி.. அந்த ஸ்டம்பும் சொல்லி வைத்தார் போல தெறித்தது.. இது கடைசி பிகில்! ஆட்டம் முடிந்தது!

இதுதான்

இதுதான்

இந்த உலகக் கோப்பை தொடரில் இதுதான் முதல் ஹாட் டிரிக் விக்கெட் ஆகும். 1987ல் சேத்தன் சர்மா உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக ஹாட் டிரிக் எடுத்துள்ளார். அதன்பின் உலகக் கோப்பையில் இந்திய வீரர் ஹாட் டிரிக் இதுதான்!

Story first published: Sunday, June 23, 2019, 3:06 [IST]
Other articles published on Jun 23, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+