Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஷமி மீது முன்பு சூதாட்ட புகார் அளித்த மனைவி ஹசின்.. ஹாட் டிரிக்கை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா?

Recommended Video

WORLD CUP 2019 IND VS AFG | Shami Hatrick | கடைசி ஓவரில் சொல்லி வைத்து தூக்கிய ஷமி

லண்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முகமது ஷமி எடுத்த ஹாட் டிரிக் விக்கெட் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவரின் மனைவி ஹசின் ஜகான் பதில் அளித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக மீடியா வெளிச்சம் இல்லாமல் இருந்த ஷமியின் மனைவி ஹசின் ஜகான் மீண்டும் வைரலாகி இருக்கிறார். இந்திய அணி குறித்து அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி வைரலாகி உள்ளது.

முகமது ஷமி 3 வருடமாக சூதாட்டம் செய்தார் என்று அவரது மனைவி ஹசின் ஜகான் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். அதேபோல் ஷமி பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக ஹசின் ஜகான் கூறினார். அதன்பின் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டு இருந்தார்.

புகாரில் உண்மை இல்லை

புகாரில் உண்மை இல்லை

இந்த நிலையில் ஷமி குறித்த புகார் பிசிசிஐ மூலம் விசாரிக்கப்பட்டது. தற்போது ஷமியின் குழந்தைகள் அவரின் மனைவியுடன் இருக்கிறார்கள். ஹசின் ஜகான் சொன்ன சூதாட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் நிரூபிக்கப்படவில்லை. பிசிசிஐ இது தொடர்பாக நடத்திய விசாரணையில் ஹசின் ஜகான் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று கூறப்பட்டது.

ஆனால் பாலியல்

ஆனால் பாலியல்

ஆனால் அவர் கொடுத்த பாலியல் புகார்கள் குறித்த முழு உண்மை இன்னும் வெளியாகவில்லை. மனைவிக்கு தெரியாமல் நிறைய பெண்களுடன் தொடர்பில் இருந்ததை பிசிசிஐ விசாரணையில் ஷமி ஒப்புக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது அவரின் தனிப்பட்ட வாழ்க்கை என்பதால் கிரிக்கெட் போட்டியில் இது பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

ஆடுகிறார்

ஆடுகிறார்

தற்போது இவர் இந்திய அணிக்காக உலகக் கோப்பை போட்டியில் ஆடி வருகிறார். கடந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இவர் கடைசி ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வரிசையாக எடுத்து ஹாட் டிரிக் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இது குறித்து தற்போது ஹசின் ஜகான் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்திய வீரர்கள் எல்லோரும் நன்றாக விளையாடினார்கள்.

நல்லது

நல்லது

இந்திய வீரர்கள் எல்லோரும் தொடர்ந்து சிறப்பாக ஆடி வருகிறார்கள். தங்கள் திறமையை அவர்கள் நிரூபித்து வருகிறார்கள். இப்படியே அவர்கள் தொடர்ந்து ஆட வேண்டும். இந்தியா இப்படி தொடர்ந்து ஆடினால் இந்திய அன்னிக்குத்தான் உலகக் கோப்பை என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அவர் பேட்டியில் எங்கும் ஷமி குறித்தோ அவரின் ஹாட்டிரிக் குறித்தோ பேச மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 25, 2019, 16:54 [IST]
Other articles published on Jun 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+