For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

5 மாத போராட்டம் அவருக்குத்தான் தெரியும்.. தவானின் அசாத்திய செஞ்சுரிக்கு பின் உள்ள பகீர் ரகசியம்!

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தவான் அடித்த செஞ்சுரிக்கு பின் முக்கிய ரகசியம் ஒன்று இருக்கிறது.

Recommended Video

சச்சின், கங்குலி சாதனையுடன் இணைந்து கலக்கிய தவான்.. !!

லண்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் தவான் அடித்த செஞ்சுரிக்கு பின் முக்கிய ரகசியம் ஒன்று இருக்கிறது.

ஐசிசி நடத்தும் பெரிய தொடர்கள் என்று வந்துவிட்டால் போதும், இந்திய அணியின் தொடக்க வீரர் தவானை கையிலேயே பிடிக்க முடியாது. சாம்பியன்ஸ் கோப்பை தொடங்கி எந்த ஒரு ஐசிசி கோப்பையாக இருந்தாலும் சரி, எதிரே நிற்பது எந்த ஒரு அணியாக இருந்தாலும் சரி, தவான் அதிரடியாக ஆடுவார்.

அதிலும் இங்கிலாந்தில் நடக்கும் போட்டி என்றால் கேட்கவா வேண்டும். அப்படி ஒரு ஆட்டத்தைதான் நேற்று தவான் வெளிப்படுத்தினார்.

அறிமுகம் ஆனார்

அறிமுகம் ஆனார்

2013 மார்ச் மாதம்தான் தவான் இந்தியாவின் டெஸ்ட் அணியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அறிமுகம் ஆனார். அதே போட்டியில் மிக அதிரடியாக ஆடி இவர் அதிவேக செஞ்சுரி அடித்தார். மொஹாலியில் நடந்த அந்த போட்டியில் அவர் 187 ரன்கள் அடித்து இந்திய அணியின் சிறந்த ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்பதை நிரூபித்தார்.

அடுத்தடுத்து அதிரடி

அடுத்தடுத்து அதிரடி

அதன்பின் கடைசியாக நடந்த 19 ஐசிசி நடத்திய தொடரின் போட்டிகள் அனைத்திலும் தவான் மிகவும் சிறப்பாக ஆடினார். முக்கியமாக ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை, உலகக் கோப்பை எல்லாமும் சேர்த்து 19 போட்டிகளில் 1121 ரன்கள் எடுத்தார். இவர் 62.28 ரன் ரேட் வைத்து இருந்தார். இதில் 5 செஞ்சுரி மற்றும் 4 அரைசதம் அடக்கம்.

முதல் போட்டி

முதல் போட்டி

இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் உலகக் கோப்பை போட்டியில் வந்த வேகத்தில் தவான் அவுட்டாகி வெளியே சென்றார். பயிற்சி ஆட்டங்களிலும் தவான் சரியாக விளையாடவில்லை. கடந்த சில ஒருநாள் தொடரிலும் சரியாக ஆடவில்லை. இதனால் தவான் மேல் அணிக்கு இருந்த நம்பிக்கை கொஞ்ச கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்தது. உலகக் கோப்பை போட்டிக்காக இளம் வீரர் யாரையாவது அணிக்கு எடுக்கலாமா என்று கோலி திட்டமிட்டுக் கொண்டே இருந்தார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில்தான் நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டி நடந்தது. இது ஒரு வகையில் அவருக்கு அளிக்கப்பட்ட கடைசி வாய்ப்பு என்று கூட கூறலாம். அதை தவான் மிக சரியாக பயன்படுத்திக் கொண்டார் என்பதை விட மிகவும் புத்திசாலித்தனமாக பயன்படுத்திக் கொண்டார் என்றுதான் கூற வேண்டும். நேற்றைய போட்டியில் தொடக்கத்தில் இருந்து தவான் நிதானமாக ஆடி வந்தார். முக்கியமாக ஆட முடியாத பந்துகளை கவலையின்றி விட்டுக்கொடுத்தார்.

சிறப்பாக ஆடினார்

சிறப்பாக ஆடினார்

பொதுவாக தவான் தேவையில்லாத பந்துகளை ஆட முயற்சி செய்து, அதை காற்றில் பறக்கவிட்டு அவுட்டாவது வழக்கம். ஆனால் நேற்று அவர் அப்படி முட்டாள் தனமான காரியம் எதையும் செய்யவில்லை. ஆஸ்திரேலிய வீரர் நைல் பந்துகள் எதையும் ஷிகர் தவான் முதல் பத்து ஓவருக்குள் தொடவே இல்லை. இதனால் அவர் திணறுவது போலவே இருந்தது. ஆனால் போக போக அவர் சுதாரிக்க தொடங்கினார்.

அடித்து ஆடினார்

அடித்து ஆடினார்

அதன்பின் வரிசையாக கொஞ்சம், கொஞ்சமாக வேகம் எடுக்க தொடங்கியது அவரின் ஆட்டம். முதல் பவர் பிளே முடிந்த முழுவதுமாக அதிரடியில் குதித்தார். முதலில் ஸ்டார்க் மற்றும் கும்மின்ஸ் ஓவர்களில் அடித்தார். அதன்பின் சாம்பா ஓவர்களில் அடித்து ஆடினார். கடைசியாக நைல் பந்துகளையும் பறக்கவிட்டார். புல் ஷாட், அப்பர் கட், லோவர் கட் என அனைத்து விதமான ஷாட்களை அடித்தார்.

பார்மிற்கு திரும்பினார்

பார்மிற்கு திரும்பினார்

இவர் கண்டிப்பாக செஞ்சுரி போட போகிறார் என்று களத்தில் இருந்த எல்லோருக்கும் அவர் ஆடிய விதத்தை பார்த்தே தெரிந்துவிட்டது. ரோஹித் ஒரு பக்கம் அவுட்டாகி இன்னொரு பக்கம் கோலி திணறிக் கொண்டு இருந்தார். ஆனால் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்தார் தவான். கோலி சரியாக பார்மிற்கு வர இவர் அதிரடியாக ஆடி அவரை கூல் செய்து அவருக்கு நேரம் கொடுத்தார் .

எத்தனை ரன்கள் எடுத்தார்

எத்தனை ரன்கள் எடுத்தார்

அதிரடியில் பலனாக தவான் 109 பந்தில் 16 பவுண்டரியுடன் மொத்தம் 117 ரன்கள் எடுத்தார். கடைசியில் ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதன் மூலம் உலகக் கோப்பை போட்டிக்காக மீண்டும் தவான் பார்மிற்கு திரும்பி உள்ளார். ஆனால் இதற்கு பின் ஐந்து மாத கடினமான உழைப்பு இருக்கிறது.

ஏன் முக்கியம்

ஏன் முக்கியம்

தவான் என்னதான் சரியான ரன் ரேட் வைத்தான் இருந்தாலும் கடந்த ஐந்து மாதத்தில் மிக மோசமான பார்மில் இருந்தார். உடல் அளவில் மட்டுமில்லாமல் மன அளவிலும் அவர் நிறைய பிரச்சனையில் இருந்தாராம். இதை எல்லாம் சரி செய்து, முறையான கவுன்சிலுங்குகளை எடுத்துவிட்டு தற்போது களத்திற்கு வந்து இருக்கிறார். அவர் நிறைய விஷயங்களை கடந்து வந்துள்ளார் என்கிறார்கள்.

செம உழைப்பு

செம உழைப்பு

இந்த 5 மாத கடின உழைப்புதான் அவரை இந்த செஞ்சுரி அடிக்க வைத்தது. இதன் மூலம் இந்த தொடர் முழுக்க அவர் நல்ல பார்மில் இருப்பார் என்றும் கூறுகிறார்கள். இந்திய அணியில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த ஓப்பனிங் பிரச்சனை தற்போது முடிவிற்கு வந்துள்ளது.

Story first published: Monday, June 10, 2019, 13:04 [IST]
Other articles published on Jun 10, 2019
English summary
ICC World Cup 2019: Shikhar Dhawan, the man of ICC matches returns with a bang against Aussie team yesterday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+