For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வதந்திகள் வரப்போகிறது தோனி.. பார்த்து இருங்கள்.. எச்சரிக்கும் அக்தர்.. என்ன சொல்ல வருகிறார்?

தோனிக்கு எதிராக சில வதந்திகள் வரப்போகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பவுலர் அக்தர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.

Recommended Video

பார்த்து இருங்கள் தோனி... எச்சரிக்கை விடுக்கும் அக்தர்

லண்டன்: தோனிக்கு எதிராக சில வதந்திகள் வரப்போகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பவுலர் அக்தர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த லீக் போட்டியில் தோனி 52 பந்தில் 28 ரன்கள் அடித்து இருந்த போது அவுட்டானார். அவர் ஆடியதிலேயே மிக மோசமான ஆட்டங்களில் இதுவும் ஒன்று என்கிறார்கள்.

இதற்கு எதிராக நிறைய பேர் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அதேபோல் தோனிக்கு எதிராக சச்சினும் கருத்து தெரிவித்து இருந்தார்.

தோனியின் ஆட்டம்

தோனியின் ஆட்டம்

இந்த நிலையில் தோனியின் ஆட்டம் குறித்து பேசிய அக்தர், இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரின் பலம் ஆப்கானிஸ்தான் போட்டிக்கு எதிராக வெளியே தெரிந்துவிட்டது. அவர்களில் பல உண்மைகளை நீண்ட நாட்களுக்கு மறைக்க முடியாது. கோலி இல்லாமல் அந்த அணி மிகவும் கஷ்டப்படும்.

எப்படி பேட்டிங்

எப்படி பேட்டிங்

கோலி பேட்டிங் சரியாக இல்லையென்றால், இந்திய அணி அவ்வளவுதான். நல்ல பேட்டிங் லைன் அப் இருப்பதாக சொன்ன அணிதான் இந்திய அணி. ஆனால் ஆப்கானிஸ்தான் போட்டியில் அது வேலை செய்யவில்லை. தோனி அந்த போட்டியில் மிக மிக மெதுவாக ஆடினார். அங்கு சில பந்துகள் மோசமாக பவுன்ஸ் ஆனது தெரியும்.

மிக மோசம்

மிக மோசம்

ஆனாலும் தோனி அப்படி எதுவாக ஆடியது இந்திய அணிக்கு பெரிய இழப்பாக மாறிவிட்டது. ஆனால் இந்தியா அதை தற்போது உணர்ந்துவிட்டது. அடுத்த போட்டியில் இந்தியா விழித்துக்கொள்ளும். தோனி சரியாக ஆடாத காரணத்தால் நிறைய வதந்திகள் வரப்போகிறது. அவருக்கு எதிராக நிறைய வதந்திகள் வரும். அவர் அதை எதிர்கொள்ள வேண்டும்.

என்ன வதந்திகள்

என்ன வதந்திகள்

நான் வதந்திகள் என்று எதை சொல்கிறேன் என்று எல்லோருக்கும் தெரியும், என்று அக்தர் குறிப்பிட்டார். இந்த நிலையில் அக்தர் தோனியின் ஓய்வு குறித்துதான் பேசுகிறார். தோனியின் ஓய்வு வதந்திகள் நிறைய வரப்போகிறது, அதை அவர் எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்துதான் அவர் எச்சரிக்கை விடுகிறார் என்று ரசிகர்கள் கூறுகிறார்கள். தோனியின் மோசமான ஆட்டம் காரணமாக அவரை பலர் ஓய்வு பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 25, 2019, 14:40 [IST]
Other articles published on Jun 25, 2019
English summary
ICC World Cup 2019: Shoaib Akhtar talks about Dhoni's batting and some rumors after Afghanistan match.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+