Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இவரை எடுக்கத்தான் எல்லா திட்டமும்.. விஜய் சங்கரை அவசரமாக வீட்டிற்கு அனுப்பியது ஏன்.. பரபர தகவல்!

Recommended Video

WORLD CUP 2019: VIJAY SHANKAR RULED OUT | தவானை தொடர்ந்து விஜய் சங்கரும் காயத்தால் விலகல்- வீடியோ

லண்டன்: இந்திய அணிக்குள் விஜய் சங்கருக்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயர் எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது. பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து இவரை இந்திய அணி தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள்.

இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையில் இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெறுகிறது. இன்று நடக்கும் போட்டி இந்த தொடரில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இன்று நடக்கும் போட்டியில் இந்தியா வெற்றிபெறும்பட்சத்தில் செமி பைனலுக்கு எளிதாக தேர்வாகிவிடும். இதனால் இன்றைய போட்டி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

இந்த நிலையில்தான் இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய அணியில் தவானை தொடர்ந்து இளம் வீரர் விஜய் சங்கரும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருக்கிறார். கால் விரலில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.

யார் வருவார்

யார் வருவார்

பயிற்சியின் போது பும்ரா போட்ட யார்க்கரால் அவருக்கு கால் விரலில் காயம் ஏற்பட்டது. இவருக்கு பதிலாக இந்திய அணி புதிய வீரரை தேர்வு செய்ய திட்டமிட்டு உள்ளது. ஏற்கனவே இவருக்கு பதிலாக இந்திய அணியில் ரிஷப் பண்ட் களமிறங்கி விளையாடி வருகிறார். ஆனாலும் புதிய வீரர் ஒருவரை வேறு ஒரு காரணத்திற்காக அணியில் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார்கள் .

புதிய வீரர்

புதிய வீரர்

அதன்படி இந்திய அணிக்குள் பெரும்பாலும் ஷ்ரேயஸ் ஐயர் கொண்டு வரப்படலாம் என்று கூறுகிறார்கள். ஷ்ரேயஸ் ஐயர் இதுவரை 6 ஒருநாள் போட்டிகளிலும், 6 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். இவர் பெரிதாக இதுவரை ஸ்கோர் செய்தது கிடையாது. ஆனாலும் மும்பையை சேர்ந்த இவர் ரஞ்சி கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடி கவனம் ஈர்த்தார்.

ஏன்

ஏன்

இந்திய அணியில் தற்போது ஓப்பனிங் பிரச்சனையாக இருக்கிறது. ஓப்பனிங் இறங்கும் கே எல் ராகுல் சரியாக ஆடுவதில்லை. இதனால் அவரின் இடத்தில் களமிறக்க ஷ்ரேயஸ் ஐயர் கொண்டு வரப்படலாம் என்று கூறுகிறார்கள். ஷ்ரேயஸ் ஐயர் நன்றாக அதிரடியாக ஆட கூடிய ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஆவார். இவர் டெல்லி ஐபிஎல் அணிக்கு கேப்டனாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உண்மை என்ன

உண்மை என்ன

இதனால் இவரை பெரும்பாலும் அணியில் எடுக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். அதேபோல் விஜய் சங்கருக்கு காயம் எல்லாம் இல்லை. அணியில் நிலவும் பிரச்னையை சரி செய்யவே இப்படி அதிரடி முடிவு எடுத்து இருக்கிறார்கள் .காயத்தை ஒரு காரணமாக சொல்லி இருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

Story first published: Tuesday, July 2, 2019, 7:47 [IST]
Other articles published on Jul 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+