Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எவ்வளவு மோசமான விஷயம் இது.. மன்னித்துவிடுங்கள்.. இந்திய அணியை கோபமாக விமர்சித்த சித்தார்த்.. ஏன்?

Recommended Video

WORLD CUP 2019 IND VS ENG | இங்கிலாந்து வெற்றி! முதல் தோல்வியை பதிவு செய்த இந்தியா

லண்டன்: கோலிவுட் நடிகர் சித்தார்த் இந்திய அணியில் நடக்கும் மாற்றங்களை மோசமாக விமர்சனம் செய்து இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட் பெரிய வைரலாகி உள்ளது.

இந்திய அணிக்குள் தொடர்ந்து நிறைய சிக்கல்களும், பிரச்சனைகளும் நடந்து வருகிறது. தோனி சரியாக ஆடுவதில்லை என்ற புகார் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது.

அதே சமயம் முக்கியமான வீரர்கள் எல்லாம் வரிசையாக காயம் காரணமாக அவதிப்பட்டு வருகிறார்கள். தவான் காயம் காரணமாக ஏற்கனவே விலகிவிட்டார். அதேபோல் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக மூன்று போட்டிகளில் விளையாடவில்லை.

இன்னொரு வீரர்

இன்னொரு வீரர்

தற்போது இந்திய அணியில் இருந்து இளம் வீரர் விஜய் சங்கரும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருக்கிறார். பயிற்சியின் போது பும்ரா போட்ட யார்க்கரால் அவருக்கு கால் விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் தொடர்ந்து ஒரு வாரமாக அவதிப்பட்டு வந்தார். இந்த காயம் காரணமாக தற்போது உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.

இல்லை

இல்லை

இவருக்கு பதிலாக மாற்று வீரராக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இவரை இந்திய அணி நிர்வாகம் இன்று லண்டன் அனுப்ப வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பல நாட்களாக 4வது இடத்தில் களமிறங்க காத்திருக்கும் முக்கியமான வீரரான அம்பதி ராயுடு இன்னும் அணிக்குள் தேர்வு செய்யப்படவில்லை. அவரை தொடர்ந்து அணி நிர்வாகம் புறக்கணித்து வருகிறது.

என் டிவிட்

அம்பதி ராயுடு புறக்கணிக்கப்படுவது குறித்து தற்போது கோலிவுட் நடிகர் சித்தார்த் டிவிட் செய்துள்ளார். அதில், அன்புள்ள ராயுடு, நீங்கள் இதை விட சிறப்பான நல்ல விஷயத்திற்கு தகுதியானவர். மன்னித்துவிடுங்கள். இது என்ன மோசம். நீங்கள் வலிமையாக இருக்க வேண்டும். உங்கள் திறமைக்கும், அர்பணிப்பிற்கும் கிடைக்க வேண்டியது இது அல்ல, என்று மிகவும் உருக்கமாக அவருக்கு ஆதரவாக டிவிட் செய்துள்ளார்.

நண்பர்கள்

நண்பர்கள்

ஏற்கனவே நேற்று தோனிக்கு ஆதரவாக சித்தார்த் டிவிட் செய்து இருந்தார். சித்தார்த் மற்றும் ராயுடு இருவரும் நெருங்கிய நண்பர்கள். தெலுங்கு படங்களில் நடித்த போதே சித்தார்த் ராயுடுவுடன் நெருக்கமானார். அதேபோல் இருவரும் சென்னையில் வசிக்கும் போதும் நண்பர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 2, 2019, 8:03 [IST]
Other articles published on Jul 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+