கொஞ்சம் கஷ்டம்.. பயிற்சியின் போது காயம்.. மருத்துவர்கள் தொடர் சோதனை.. கோலிக்கு என்னதான் ஆச்சு?
Recommended Video
லண்டன்: லண்டனில் பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் விராட் கோலிக்கு கொஞ்சம் பிரச்சனையாக முடிய வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் விராட் கோலி ஒரு போட்டியில் ஆட முடியாத நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.
இந்திய அணியின் நம்பிக்கை விராட் கோலிதான். கண்டிப்பாக போட்டிக்கு ஒரு செஞ்சுரி எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு அவர் உதவுவார் என்று நம்புகிறார்கள்.
எப்போதும் பார்மில் இருக்கும் விராட் கோலி , பார்ம் அவுட் ஆகிவிட்டார் என்ற கதையே இதுவரை நிகழ்ந்தது கிடையாது. இவர் பார்ம் அவுட் ஆனது எல்லாம் பெங்களூர் ஐபிஎல் அணியில் இருக்கும் போது மட்டுமே.

காயம் இல்லை
அதேபோல் இவர் எப்போதும் காயப்பட்டது கிடையாது. பெரிதாக இவருக்கு காயம் என்று எதுவும் ஏற்பட்டது இல்லை. உடலை மிக சரியாக பார்த்துக் கொள்ளும் இவர் காயங்களில் இருந்து தப்பிப்பதில் மிகவும் கவனமாக இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

என்ன ஆனது
இந்த நிலையில் விராட் கோலி நேற்று முதல்நாள் பயிற்சி செய்து கொண்டு இருக்கும் போதுதான் காயம் ஏற்பட்டது. அவரின் பெருவிரலில் சிறிய காயம் ஏற்பட்டது, பெருவிரல் சதையில் பந்து பட்டு, சிறிதாக கிழித்தது. சதைக்கு உள்ளேயும் சிறிதாக கிழிந்தது குறிப்பிடத்தக்கது.

சிறிய காயம்
ஆனால் இந்த காயம் மிக மிக சிறிதாக இருந்தது. இதனால் இவர் பேண்ட் எய்ட் போட்டுவிட்டு தனது பயிற்சியை மீண்டும் துவங்கினார். ஆனால் அவர் பேட்டிங் செய்ய செய்ய அந்த சிறிய காயம் பெரிதானது . அவர் கையில் ஏற்பட்ட சிறிய காயம் கிழிந்து, விரலை நகற்ற முடியாத நிலைக்கு சென்றது. இதனால் உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டனர்.

எப்படி
ஆனால் அவரின் காயம் மைதானத்தில் வைத்து குணப்படுத்த கூடியது கிடையாது. இதனால் அவர் உடனடியாக பயிற்சியை நிறுத்திவிட்டு தனது அறைக்கு சென்றார். அதன்பின் அங்கு மருத்துவர்கள் அவரை சோதனை செய்தனர். கை விரலில் மட்டும் வீக்கம் இருந்துள்ளது. வீக்கம் சரியாகாமல் இருந்ததால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரியாகவில்லை
காயம் இன்னும் முழுதாக அவருக்கு சரியாகவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் நேற்று மாலை பயிற்சி எடுக்க வந்த கோலி சில நிமிடம் மட்டுமே பயிற்சி எடுத்தார். அதன்பின் விரல் வலி காரணமாக பயிற்சியில் இருந்து பாதியில் வெளியேறினார்.

வருவார்
இவரை தொடர்ந்து மருத்துவர்கள் சோதித்து வருகிறார்கள். காயத்துடன் விளையாடினால் அது இன்னும் பெரிய காயமாகி பிரச்சனை ஏற்படும். இதனால் அவரின் காயம் சரியாகும் வரை விளையாட வேண்டாம். ஒரு போட்டியில் மட்டும் விளையாடாமல் ஓய்வு எடுப்பது நல்லது என்று கூறுகிறார்கள். இவர் பெரும்பாலும் உடல் தகுதியை நிரூபித்து போட்டிக்கு திரும்புவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications