Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இப்படி யாருமே நினைக்கவில்லை.. உலகக் கோப்பையில் நிகழ்ந்த முதல் அதிர்ச்சி.. பெரிய அணிக்கு விழுந்த அடி!

Recommended Video

WORLD CUP 2019: SA VS PAK | உலகக் கோப்பையில் நிகழ்ந்த முதல் அதிர்ச்சி- வீடியோ

லண்டன்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இப்படி நடக்கும் என்று யாருமே நினைக்காத, யாருமே கணிக்காத ஒரு விஷயம் நேற்று நடந்தது. சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த தொடரில் நிகழ்ந்த பெரிய அதிர்ச்சி என்றால் அது இதுதான் என்று கூட கூறலாம்.

உலகக் கோப்பை ஆட்டம் இப்போதுதான் சூடு பிடித்து இருக்கிறது. சென்ற வாரம் முழுக்க இந்த தொடரில் நடந்த லீக் போட்டிகள் எல்லாம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. பல போட்டிகள் கடைசி நேரத்தில் முடிவு மாறியது.

இங்கிலாந்தில் தற்போது மழை பெய்வதும் குறைந்துள்ளதால், போட்டிகள் எல்லாம் தடை பெறாமல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் செமி பைனலுக்கு எந்த அணிகள் எல்லாம் செல்ல போகிறது என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

யார் சிறந்த அணிய

யார் சிறந்த அணிய

இந்த தொடரில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாமல் மிகவும் வலுவான அணிகளாக இருக்கிறது. இந்த இரண்டு அணிகளும்தான் இந்த உலகக் கோப்பை தொடரில் மிகவும் வலுவான அணிகள் ஆகும், கோப்பைக்கும் வாய்ப்புள்ளது. அதற்கு அடுத்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் வலுவான அணியாக இருக்கிறது. இந்த 4 அணிகள்தான் முதல் நான்கு இடங்களில் இருக்கிறது.

அடுத்த இடங்கள்

அடுத்த இடங்கள்

இதில் இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கிறது. இந்த அணிகள் எப்படியாவது 4வது இடத்தை பிடிக்க வேண்டும் என்று தீவிரமாக முயற்சி எடுத்து வருகிறது. இதில் பெரும்பாலும் வங்கதேசம் அல்லது பாகிஸ்தானுக்கு 4 வது இடத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இதற்கு அடுத்த மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் இருக்கிறது. மேற்கு இந்திய தீவுகள் அணி ஒரு போட்டியில் மட்டுமே வென்று இருக்கிறது. இதனால் பெரும்பாலும் மேற்கு இந்திய தீவுகள் அணி செமி பைனலுக்கு செல்ல முடியாது. அதேபோல் ஆப்கானிஸ்தான் அணி ஒரு போட்டியில் கூட வெல்லாத காரணத்தால் அந்த அணியும் செமி பைனலுக்கு செல்ல முடியாது.

தென்னாப்பிரிக்கா மோசம்

தென்னாப்பிரிக்கா மோசம்

தென்னாப்பிரிக்கா அணி மொத்தம் 7 போட்டிகளை விளையாடி இருக்கிறது. இதில் 1 போட்டி மழையால் தடைபட்டது. ஒரு போட்டியில் மட்டும் தென்னாப்பிரிக்கா வெற்றிபெற்றது. அதுவும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி. மற்ற அனைத்து போட்டிகளிலும் தென்னாப்பிரிக்கா அணி மோசமாக தோல்வி அடைந்து உள்ளது.

படுமோசம்

படுமோசம்

மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் தென்னாப்பிரிக்கா அணி வங்கதேசம், பாகிஸ்தான் அணிக்கு எதிராகவும் தோல்வி அடைந்துள்ளது. தற்போது புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி 9வது இடத்தில் இருக்கிறது. நேற்று நடந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்தது.

வெளியேறும்

வெளியேறும்

இந்த தொடரில் தற்போது வரை 7 போட்டிகளில் விளையாடிய ஒரே அணி தென்னாப்பிரிக்காதான். அதனால் அந்த அணி கண்டிப்பாக செமி பைனலுக்கு செல்லாது என்பது உறுதியாகி இருக்கிறது. இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே அந்த அணி விளையாட வேண்டும். அந்த இரண்டு போட்டிகளை விளையாடி முடித்த பின் அந்த அணி தொடரில் இருந்து வெளியேறும்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

இந்த உலகக் கோப்பை தொடரில் தொடக்கத்தில் கோப்பை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக தென்னாப்பிரிக்கா அணி இருந்தது. ஆனால் தற்போது எல்லாம் தலைகீழாக மாறி முதலில் வெளியே செல்லும் அணியாக தென்னாப்பிரிக்கா மாறியுள்ளது. அணியில் வலுவான வீரர்கள், திறமையான வீரர்கள் இருந்தும் அந்த அணி இப்படி ஒரு தோல்வியை சந்தித்து இருக்கிறது.

ஏன் இப்படி

ஏன் இப்படி

தென்னாப்பிரிக்கா அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் ஆர்டர் இரண்டும் நல்ல வலுவாக இருந்தது. இளம் வீரர்கள், நல்ல அனுபவ வீரர்கள், இளம் பவுலிங் படை, நல்ல மிடில் ஆர்டர் என்று தென்னாப்பிரிக்கா அணியில் எல்லாமே நன்றாகவே இருந்தது. ஆனாலும் அந்த அணி எந்த ஒரு போட்டியிலும் வெற்றிக்கனியை ருசிக்க முடியவில்லை என்பதுதான் சோகமான விஷயம்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்பான வண்ணமயமான புகைப்படங்களை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும்!

Story first published: Monday, June 24, 2019, 11:05 [IST]
Other articles published on Jun 24, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+