கங்கை நதியில் ஆரத்தி.. அதிகாலையிலேயே நடந்த சிறப்பு பூஜை.. களைகட்டும் இந்தியா - பாக். போட்டி!
லண்டன்: இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டியில் இந்தியா வெல்ல வேண்டும் என்று சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.
உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான லீக் ஆட்டம் இன்று மான்செஸ்டரில் நடக்க உள்ளது. இந்தியா பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் இன்று நடக்க உள்ளது.
இன்று நடக்கும் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றால் புள்ளி பட்டியலில் இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு செல்ல முடியும். தற்போது இந்திய அணி புள்ளி பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் எப்படி
அதே சமயம் இந்திய அணியை பாகிஸ்தான் வீழ்த்தினாலும் அதற்கு பெரிய அளவில் பலன் கிடையாது. பாகிஸ்தான் ஏற்கனவே பெரிய போட்டிகள் பலவற்றை தோற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் வெற்றிபெற்றால், பாகிஸ்தான் தொடர்ந்து 6 முறை இந்திய அணியிடம் உலகக் கோப்பை போட்டியில் தோல்வி அடைந்த களங்கத்தை துடைக்க முடியும்.

தீவிர முயற்சி
இதற்காக பாகிஸ்தான் அணியினர் தீவிரமாக பயிற்சி எடுத்து வருகிறார்கள். இந்திய பவுலர்களை சமாளிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் வலைப்பயிற்சியில் ஈடுப்பட்டு வருகிறார்கள். அதேபோல் பாகிஸ்தான் பவுலர்களும் புதிய டெக்கினிக்குகளை பயிற்சி எடுத்து வருகிறார்கள்.

இங்கே என்ன
இந்த நிலையில் இந்திய வீரர்கள் ஒரு பக்கம் பயிற்சி எடுத்தாலும், இன்னொரு பக்கம் இந்திய வீரர்களுக்காக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தியா முழுக்க பல்வேறு கோவில்களில் இந்திய அணி வெற்றிபெறவேண்டும் என்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு முக்கிய கோவில்களில் கூட இந்த சிறப்பு பூஜை நடந்தது.

காசி
அதேபோல் காசியிலும் இன்று சிறப்பு பூஜை நடந்தது. கங்கை நதியில் இந்திய அணியின் வெற்றிகாக சிறப்பு ஆரத்தி எடுக்கப்பட்டது. பின் 20 நிமிடம் மந்திரம் சொல்லி சிற்பபு பூஜை செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் நன்றாக விளையாட வேண்டும் என்று இந்த பூஜை நடத்தப்பட்டது.
செம
இந்த பூஜை தற்போது பெரிய வைரலாகி உள்ளது. இந்த பூஜையை தொடர்ந்து இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகம் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications