Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலக கோப்பையில் இவர் தான் நிறைய ரன்களை அடிப்பார்… அந்த வீரரை கைகாட்டும் ஸ்டுவர்ட் பிராட்

லண்டன்:நடைபெற இருக்கிற உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தான் அதிக ரன்களை குவிப்பார் என்று ஸ்டுவர்ட் பிராட் ஆரூடம் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் திருவிழாக்களில் முக்கியமான உலக கோப்பை வரும் 30ம் தேதி தொடங்குகிறது. இந்த உலக கோப்பையை இந்தியா அல்லது இங்கிலாந்து அணிதான் வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் கணித்துள்ளனர். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுக்கும் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Icc world cup 2019: stuart broad predicts the highest run scorer

உலக கோப்பை தொடர் சொந்த மண்ணில் நடப்பதால், இங்கிலாந்து கோப்பையை வெல்வதற்கான வாய்ப்பு கூடுதலாக உள்ளது. முதன்முறையாக உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் அந்த அணி உள்ளது. ஏனெனில் 2 ஆண்டுகளாக இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

இயன் மோர்கன், பட்லர், பெயர்ஸ்டோ, ஜோ ரூட் என இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டர் வலுவாக உள்ளது. இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, தவான் ஆட்டம் சிறப்பாக இருக்கிறது. வார்னர், ஸ்மித் எனஆஸ்திரேலிய அணிக்கு வலுவாக உள்ளது.

உலக கோப்பையில் விராட் கோலி, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய 4 அதிரடி வீரர்கள் ஆட உள்ளனர். அவர்களில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் தான் அதிக ரன் குவிப்பார் என்று இங்கிலாந்து டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் கணித்துள்ளார். ஸ்டுவர்ட் பிராட் 2016ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து ஒருநாள் அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

Story first published: Monday, May 6, 2019, 13:04 [IST]
Other articles published on May 6, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+