இந்தியா பாக் போட்டிக்கும்.. சென்னை தண்ணீர் பஞ்சத்திற்கும் இப்படி ஒரு தொடர்பா.. வெதர்மேன் வாவ் போஸ்ட்
லண்டன்: இன்று இந்தியா பாகிஸ்தான் இடையே நடக்கும் போட்டி குறித்து தமிழ்நாடு வெதர்மேன் போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அவரின் இந்த போஸ்டிற்கும் சென்னை தண்ணீர் பஞ்சத்திற்கும் பெரிய தொடர்பு இருக்கிறது மக்களே.
இன்று இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் உலகக் கோப்பை லீக் போட்டி நடைபெறுகிறது. இந்தியா பாகிஸ்தான் போட்டி என்றாலே பெரிய பரபரப்பு இருக்கும்.
இந்த போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த நிலையில் தற்போது மான்செஸ்டரில் மிக மோசமாக மழை பெய்து வருகிறது. நேற்று இரவில் இருந்து மிக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் இன்று போட்டி பாதிக்கும் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

என்ன சொன்னார்
இந்த நிலையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி குறித்து தமிழ்நாடு வெதர்மென் போஸ்ட் செய்துள்ளார். அதில், இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதினால் மட்டும் அது தொடர்பான வானிலை அறிவிப்புகளை நான் வெளியிடுவது வழக்கம். இன்று நல்ல மழை பெய்து போட்டி தடை படுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. நல்ல மழைக்கு நிறைய வாய்ப்புள்ளது.

சிஎஸ்கே
நம்ம ஆளுங்கதான் சிஎஸ்கே மேட்ச் நடக்கும்னா ''ரெயின் ரெயின் கோ அவேன்னு'' சொல்ற ஆளுங்க ஆச்சே. ஆனா இன்னைக்கு மேட்ச் நடந்தால் கண்டிப்பாக தண்ணீர் பஞ்சம் குறையும். நிறைய தண்ணீர் மிச்சம் ஆகும். ஆமாம் அதுக்கும் காரணம் இருக்கும். இன்னைக்கு சண்டே, இன்னைக்கு குளிக்காம சோபால உட்கார்ந்து மேட்ச் பாக்குற சுகமே தனிதான்.

நல்லது
அதே மாதிரி நாம் சோபாவை விட்டு ஒரு அடி கூட நகர மாட்டோம். அப்படி மாறி உட்கார்ந்தா இந்திய அணியில் விக்கெட் விழும். அதனால் இன்று போட்டி நடந்தால் கண்டிப்பாக யாரும் குளிக்க மாட்டார்கள். கண்டிப்பாக நிறைய தண்ணீர் மிச்சம் ஆகும். அதனால் இந்தியா பாகிஸ்தான் போட்டியை நடத்தி கண்டிப்பாக சென்னை தண்ணீர் பஞ்சத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

விஜய் சங்கர்
அதேபோல் கோலி ஆர்வ கோளாறில் இரண்டு ஸ்பின்னர்களை இன்று எடுக்க கூடாது. அதற்கு பதிலாக இன்று ஷமியை களமிறக்கலாம். தவானுக்கு பதில் விஜய் சங்கர் களமிறங்கினால் சரியாக இருக்கும், என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications