For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அட கடவுளே.. இந்திய அணியின் செமி பைனல் போட்டிக்கு இப்படி ஒரு சிக்கலா? குழப்பத்தில் கோலி அண்ட் கோ!

இந்தியா விளையாட இருக்கும் செமி பைனல் போட்டிக்கு முக்கியமான சிக்கல் ஒன்று காத்து இருக்கிறது.

Recommended Video

WORLD CUP 2019 : IND VS NZ | இந்திய அணியின் அரையிறுதி போட்டிக்கு இப்படி ஒரு சிக்கலா?- வீடியோ

லண்டன்: இந்தியா விளையாட இருக்கும் செமி பைனல் போட்டிக்கு முக்கியமான சிக்கல் ஒன்று காத்து இருக்கிறது.

உலகக் கோப்பை தொடரில் ஆரம்பம் முதல் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. புள்ளி பட்டியலில் தற்போது இந்தியாதான் முதலிடத்தில் உள்ளது.

ஆஸ்திரேலியா இரண்டாம் இடம் வகிக்கிறது, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் மூன்று மற்றும் நான்காம் இடம் வகிக்கிறது.

யார் எல்லாம் மோதல்

யார் எல்லாம் மோதல்

மொத்தம் இரண்டு செமி பைனல் போட்டிகள் நடக்கும். ரவுண்ட் ராபின் முறையின்படி புள்ளிகள் பட்டியலில் முதலில் இருக்கும் அணி நான்காவது இருக்கும் அணியை செமி பைனலில் எதிர்கொள்ளும். இரண்டாவது இருக்கும் அணி மூன்றாவது இருக்கும் அணியை செமி பைனலில் சந்திக்கும். செமி பைனலில் இந்தியா நியூசிலாந்து மோத உள்ளது. இன்னொரு செமி பைனலில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோத இருக்கிறது.

மழை

மழை

இந்த நிலையில் இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதும் செமி பைனல் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஆம் மான்செஸ்டர் மைதானத்தில் 40% வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதான் இந்திய அணிக்கு சிக்கலாக முடிந்து இருக்கிறது.

மாற்று போட்டி

மாற்று போட்டி

ஏற்கனவே இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் நடக்க இருந்த லீக் போட்டி மழை காரணமாக ரத்தானது. இதனால் செமி பைனல் போட்டி மழை காரணமாக ரத்தாகாமல் இருக்க வேண்டும் . இப்போதே அங்கு லேசாக மழை பெய்து வருவதால், கோலி உள்ளிட்ட வீரர்கள் உள் அரங்கில் பயிற்சி செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடக்க போவது என்ன

நடக்க போவது என்ன

ஒருவேளை இந்த செமி பைனல் போட்டியை மழை குறுக்கிட்டு மொத்தமாக வாஷ் அவுட் ஆனால் பின்வரும் மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்.

1. மழை இல்லாத இன்னொரு நாளில் செமி பைனல் போட்டி நடக்கும்.

2. மாற்று நாளிலும் மழை பெய்து, 20 ஓவருக்கு முன்பாக போட்டி முடிந்தால் ஒரே ஒரு சூப்பர் ஓவர் போடப்பட்டு போட்டி முடிவு தீர்மானிக்கப்படும்.

3. ஒரு ஓவர் கூட போட முடியாத நிலை ஏற்பட்டால், புள்ளி பட்டியலில் இரண்டு அணிகளில் எது அதிக புள்ளி பெற்றுள்ளதோ அந்த அணி பைனலுக்கு செல்லும்.

தயார்

தயார்

இதனால் இந்திய அணி வீரர்கள் அனைத்திற்கும் தயாராக இருக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இந்திய அணிக்கு செமி பைனல் போட்டிக்கு பயிற்சி செய்ய போதுமான நேரம் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 8, 2019, 10:58 [IST]
Other articles published on Jul 8, 2019
English summary
ICC World Cup 2019: Team India and New Zealand have an unwanted threat ahead of Semi-Final games.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+