Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எல்லாம் வெளியே தெரிந்துவிட்டது.. இனியாவது இந்திய அணி சரி செய்யுமா? கோலி டீமிற்கு கடைசி வார்னிங்!

Recommended Video

World Cup 2019 - எல்லாம் வெளியே தெரிந்துவிட்டது.. கோலி டீமிற்கு கடைசி வார்னிங்!

லண்டன்: இந்திய அணி செமி பைனலுக்குள் நுழைந்துவிட்டாலும் கூட நிறைய பிரச்சனைகளை, தவறுகளை வரும் சமயங்களில் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு இருக்கிறது.

உலகக் கோப்பை தொடரில் கோப்பையை வெல்ல போகும் அணிகளில் ஒன்றாக இந்திய அணி பார்க்கப்படுகிறது. இந்த வாரத்தின் இறுதியில் இருந்து செமி பைனல் போட்டிகள் தொடங்க உள்ளது.

ஆனால் அதே செமி பைனலுக்கு தேர்வாகி இருக்கும் மற்ற மூன்று அணிகள் ஒன்றும் சாதாரண அணிகள் கிடையாது. எல்லாம் இந்த தொடரில் வெற்றிகளை அள்ளிக்குவித்த வலுவான அணிகள் ஆகும்.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்திய அணி ஆஸ்திரேலியா இங்கிலாந்து போல அத்தனை வலுவான அணியாக இந்த தொடரில் இல்லை. இந்திய அணிக்கு நிறைய குறைகள் இருக்கிறது. இதுவரை வெளியே தெரியாமல் இருந்த பல பிரச்சனைகள் தற்போது பட்டவர்த்தனமாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது.

பிரச்சனை 1

பிரச்சனை 1

இந்திய அணிக்கு இருக்கும் முதல் பிரச்சனை ஓப்பனிங் வீரர்கள். இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா தொடர்ந்து நன்றாக ஆடி வருகிறார். ஆனால் கே எல் ராகுல் இன்னும் முழுமையாக சரியான தொடக்க வீரராக உருவெடுக்கவில்லை. இத்தனை வருடங்கள் 4வது இடத்தில் ஆடிய அவர் தொடக்க வீரராக இறங்க முடியாமல் திணறி வருகிறார். சிறிய அணிகளுக்கு எதிராக மட்டுமே அவர் அதிரடி காட்டுகிறார்.

அடுத்த பிரச்சனை

அடுத்த பிரச்சனை

இந்திய அணிக்கு அடுத்த பிரச்சனை என்றால் அது மிடில் ஆர்டர். தற்போது பண்ட் வருகைக்கு பின் இந்திய அணியின் மிடில் ஆர்டர் கொஞ்சம் வலு அடைந்துள்ளது. ஆனாலும் தோனிக்கு அடுத்த பாண்டியாவிற்கு முன் யார் இறங்குவார்கள் என்ற கேள்வி எழுந்து உள்ளது. அந்த இடத்தில் கேதார் ஜாதவ் ஆடுவாரா? அல்லது தினேஷ் கார்த்திக் இறங்குவாரா என்ற கேள்வி உள்ளது. இரண்டு பேருமே தங்கள் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

இன்னொரு பிரச்சனை

இன்னொரு பிரச்சனை

இது இல்லாமல் கடைசி 10 ஓவரில் இந்திய அணியின் ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கடந்த எல்லா போட்டிகளிலும் இந்திய அணியின் ஒரே பிரச்சனையாக இது தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதை செமி பைனல் நடக்கும் முன் இந்திய அணி சரி செய்ய வேண்டும்.

ஸ்பின் பவுலர்கள்

ஸ்பின் பவுலர்கள்

எல்லாம் போக இந்திய அணியின் ஸ்பின் ஜோடி பெரிய அளவில் இந்த தொடரில் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. ஆங்காங்கே சாஹல் விக்கெட் எடுக்கிறார். குல்தீப் பெரிய அளவில் இந்திய அணிக்கு இன்னும் உதவவில்லை. இதனால் தற்போது இந்திய அணியின் ஸ்பின் பலம் பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. இந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்தால்தான் இந்திய அணி செமி பைனலில் சரியாக விளையாட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, July 4, 2019, 11:51 [IST]
Other articles published on Jul 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+