For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக் கோப்பைக்கு பின் தெரியும்.. பாருங்கள்.. இந்திய அணியில் விஸ்வரூபம் எடுக்க போகும் பிரச்சனைகள்!

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்குள் நடக்கும் சில பிரச்சனைகள் உலகக் கோப்பை தொடர் முடிந்த பின் பெரிய அளவில் வெளியே தெரியும் என்று கூறுகிறார்கள்.

Recommended Video

WORLD CUP 2019 | GAMBHIR SLAMS SELECTORS | இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவை விளாசிய கம்பீர்!

லண்டன்: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்குள் நடக்கும் சில பிரச்சனைகள் உலகக் கோப்பை தொடர் முடிந்த பின் பெரிய அளவில் வெளியே தெரியும் என்று கூறுகிறார்கள்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் மிகவும் தீவிரமாக நடந்து வருகிறது. இதில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வரிசையாக எல்லா போட்டிகளிலும் வெற்றிபெற்று செமி பைனலுக்கு தேர்வாகி உள்ளது.

இனி செமி பைனலில் இந்தியா எப்படி ஆட போகிறது என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது. இந்த நிலையில் உலகக் கோப்பை முடிந்த பின் இந்திய அணிக்குள் நிறைய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளது.

 முதல் விஷயம்

முதல் விஷயம்

உலகக் கோப்பைக்கு பின் கண்டிப்பாக தோனி ஓய்வு பெற போகிறார். அவர் இந்த தொடரிலேயே ஓய்வு பெறுவாரா அல்லது மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ஓய்வு பெறுவாரா என்பதுதான் தற்போது கேள்வியாக இருக்கிறது. ஆனால் என்ன நடந்தாலும் இவரின் ஓய்விற்கு பின் இந்திய அணிக்குள் தலைமை பதவிக்கான போட்டிகள் கடுமையாக இருக்க போகிறது என்கிறார்கள்.

யார் தலைமை

யார் தலைமை

என்னதான் தற்போது கோலி கேப்டனாக இருந்தாலும், ரோஹித் சர்மா கேப்டனாக முயன்று கொண்டு இருக்கிறார். கேப்டனாக வர வேண்டும் என்று ஆசை இருக்கிறது என்று இந்த வருட தொடக்கத்தில் ரோஹித் பேட்டி அளித்து இருந்தார். தற்போது உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணியின் தொடர் வெற்றிக்கு அவர் காரணமாகி உள்ளார். இதனால் இந்த தொடருக்கு பின் ரோஹித் சர்மா தலைமை பொறுப்பிற்கு வர கண்டிப்பாக முயற்சி செய்வார்.

பயிற்சியாளர்

பயிற்சியாளர்

அதேபோல் இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் யார் என்ற கேள்வியும் அதிகமாக எழுந்துள்ளது. இந்திய அணி தற்போது புதிய பயிற்சியாளரை தேட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் உலகக் கோப்பை தொடரோடு முடிகிறது. இதன் பின்பே புதிய பயிற்சியாளர் யார் என்பதற்கான பிரச்சனை வெடிக்கும்.

கடைசி

கடைசி

இதெல்லாம் போக வரும் அக்டோபர் மாதம் பிசிசிஐ அமைப்பில் வீரர்கள் தேர்வு கமிட்டி மொத்தமாக கலைக்கப்பட உள்ளது. அதற்கு பதிலாக புதிய கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இவர்கள் வந்த பின் அணிக்குள் யார் தேர்வு செய்யப்படுவார்கள், 2020 டி 20 உலகக் கோப்பை போட்டிக்காகக் அணியில் என்ன மாற்றம் எல்லாம் செய்யப்படும் என்று கேள்விகள் எழுந்துள்ளது. இதனால் அப்போது பல அதிரடி மாற்றங்கள் அணியில் நடக்க வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, July 4, 2019, 11:31 [IST]
Other articles published on Jul 4, 2019
English summary
ICC World Cup 2019: Team India may face some internal issues after this series.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+