Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுப்போம்.. புத்தம் புது பொலிவுடன் களமிறங்கும் இந்திய அணி.. சோதனை முயற்சி!

Recommended Video

WORLD CUP 2019: IND VS SL | புது பொலிவுடன் களமிறங்கும் இந்தியா! சோதனை முயற்சி!- வீடியோ

லண்டன்: உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் அடுத்த போட்டியில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தற்போது கொஞ்சம் ரிலாக்ஸ் மோடிற்கு செல்லலாம். ஆம், இந்திய அணி கடைசியாக செமி பைனலுக்குள் நுழைந்துவிட்டது.

இதனால் அடுத்து நடக்கும் லீக் போட்டியில் இந்திய என்ன மாதிரியான சோதனை முயற்சிகளை வேண்டுமானாலும் செய்து பார்க்க முடியும். இலங்கைக்கு எதிரான போட்டியில் இதனால் இந்திய அணியில் சில மாற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

அதன்படி இலங்கைக்கு எதிராக இந்திய அணியின் மிடில் ஆர்டரில் சில மாற்றங்கள் செய்யப்படும். தினேஷ் கார்த்திக் அனுப்பப்பட்டு அவருக்கு பதிலாக மீண்டும் குல்தீப் யாதவ் அணிக்குள் கொண்டு வரப்படலாம் என்று கூறுகிறார்கள். இல்லையென்றால் பெரும்பாலும் ஆல் ரவுண்டர் ஆப்ஷனுக்காக இந்திய அணிக்குள் மீண்டும் கேதார் ஜாதவ் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது.

வேறு யார்

வேறு யார்

அதேபோல் தொடக்க வீரராக களமிறங்கி விளையாடி வரும் கே எல் ராகுல் தொடர்ந்து சொதப்பி வருகிறார். சிறிய அணிகளுக்கு எதிராக மட்டுமே அவர் நன்றாக ஆடுகிறார். அவர் நான்காவது வீரராகவே நன்றாக ஆடினார். இதனால் மீண்டும் அவர் இந்திய அணியில் நான்காவது வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பெரும்பாலும் மீண்டும் பலம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

யார் வருவார்

யார் வருவார்

இந்திய அணியில் தொடக்க வீரராக இளம் வீரர் மயங்க் அகர்வால் களமிறங்க வாய்ப்புள்ளது . இலங்கை போட்டியில் மட்டும் இவரை வைத்து இந்திய அணி நிர்வாகம் சோதனை முயற்சி செய்ய வாய்ப்புள்ளது. இவர் அந்த போட்டியில் சரியாக ஆடினால் அவரை வைத்தே இந்திய அணி அடுத்தடுத்த போட்டிகளில் ஓப்பனிங் இறங்கினாலும் இறங்க வாய்ப்பு இருக்கிறது.

என்ன அணி

என்ன அணி

இதனால் இலங்கைக்கு எதிராக புதுப்பிக்கப்பட்ட இந்திய அணி களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். பெரும்பாலும் இந்திய அணியில் ரோஹித், மயங்க் அகர்வால், கோலி, பாண்டியா, பண்ட், கே எல் ராகுல், தோனி, குல்தீப், சாஹல், பும்ரா, சமி ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Thursday, July 4, 2019, 13:19 [IST]
Other articles published on Jul 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+