Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒன்று நடந்தது.. இன்னொன்று நடக்கவில்லை.. நியூஸியை வீழ்த்த கோலி கொண்டு வந்த வீரர்.. அதிரடி மாற்றம்!

Recommended Video

WORLD CUP 2019 IND VS NZ SEMIFINAL | இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு

லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக செமி பைனல் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் ஒரு அதிரடி மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

எல்லோரும் எதிர்பார்த்த அந்த போட்டி இன்னும் சற்றுநேரத்தில் நடக்க போகிறது. கெத்தாக கேட்டை எல்லாம் திறந்து கொண்டு இந்திய அணி செமி பைனலுக்கு நுழைந்துவிட்டது.

செமி பைனலில் இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டம் இன்னும் சற்று நேரத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டியில் எப்படியாவது வெற்றிபெற்று பைனலுக்கு செல்ல இந்திய அணி தீவிரமாக முயன்று வருகிறது.

இந்திய அணியின் பலம்

இந்திய அணியின் பலம்

இந்திய அணி நியூசிலாந்து அணியை விட வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டு இருக்கிறது. கே எல் ராகுல் தொடங்கி ஜடேஜா வரை இந்திய அணியில் அதிரடியாக ஆட கூடிய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கே எல் ராகுல் , ரோஹித், பண்ட், கோலி, தோனி, தினேஷ் கார்த்திக், பாண்டியா, ஜடேஜா என்று எல்லோரும் அதிரடியாக ஆட கூடிய வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பவுலிங் பலம்

பவுலிங் பலம்

அதேபோல் வேகப்பந்து வீச்சில் இரண்டு அணிகளும் சம பலம் கொண்டுள்ளது. நியூசிலாந்து அணியில் போல்ட் மாற்று லோகி ஆகியோர் இருக்கிறார்கள். இந்திய அணியில் வேகப்பந்து வீச பும்ரா, புவனேஷ்வர் இருவரும் இருக்கிறார்கள். இதனால் இரண்டு அணிகளும் வேகப்பந்து வீச்சில் அதிரடி காட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

தற்போது இந்திய அணியில் இருந்து எல்லோரும் எதிர்பார்த்தபடி குல்தீப் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில் இன்னொரு ஸ்பின் பவுலரான சாஹல் சேர்க்கப்பட்டுள்ளார். இன்னொரு ஸ்பின் ஆப்ஷனுக்கு இந்திய அணியில் ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். ஆனால் எல்லோரும் எதிர்பார்த்த ஷமி அணிக்குள் எடுக்கப்படவில்லை.

என்ன அணி

என்ன அணி

அதன்படி இந்திய அணியில் நியூசிலாந்துக்கு எதிராக கே எல் ராகுல் , ரோஹித், பண்ட், கோலி, தோனி, தினேஷ் கார்த்திக், பாண்டியா, ஜடேஜா, பும்ரா, புவனேஷ்வர், சாஹல் ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள்.

Story first published: Tuesday, July 9, 2019, 15:28 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+