For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆரம்பமே அதிர்ச்சி.. மொத்தமாக சரிந்த இந்திய பேட்டிங்.. அடுத்தடுத்த விக்கெட்டுக்கு இதுதான் காரணமா?

நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் மோசமாக சொதப்பி இருக்கிறது.

Recommended Video

World Cup 2019 : Ind Vs Nz : அடுத்தடுத்த விக்கெட்டுக்கு இதுதான் காரணமா?- வீடியோ

லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் மோசமாக சொதப்பி இருக்கிறது. இந்திய அணியை சேர்ந்த முக்கியமான பேட்ஸ்மேன்கள் எல்லோரும் வரிசையாக விக்கெட்டுகளை இழந்து வருகிறார்கள்.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான செமி பைனல் போட்டி தற்போது நடந்து வருகிறது. நேற்று பாதி போட்டி நடந்து முடிந்த நிலையில் தற்போது இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

நேற்று இந்திய அணியின் பவுலிங் எப்படி சிறப்பாக இருந்ததோ அதேபோல் இன்று நியூசிலாந்து அணியின் பவுலிங்கும் மிகவும் சிறப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறி வருகிறார்கள்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து திணறி திணறி மிகவும் மோசமாக ஆடியது. 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்களை அந்த அணி அடித்தது. அந்த அணி கடைசி நேரத்தை விட தொடக்கத்தில்தான் அதிக ரன்களை எடுத்தது. கடைசி 4 ஓவர்களில் அந்த அணி 28 ரன்களை எடுத்தது.

வரிசையாக விக்கெட்

வரிசையாக விக்கெட்

அதன்பின் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்தில் இருந்தே திணறி வருகிறது. நியூசிலாந்து அணியின் பவுலர்களை சமாளிக்க முடியாமல் இந்திய அணி வீரர்கள் மோசமாக திணறி வந்தனர். ரோஹித் சர்மா 1 ரன்கள் அடித்து இருந்த நிலையில் டாம் லதாம் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இங்குதான் இந்திய அணிக்கு முதல் அதிர்ச்சி வந்தது.

அடுத்த விக்கெட்

அடுத்த விக்கெட்

அடுத்த விக்கெட்டும் அடுத்த சில நொடிகளில் விழுந்தது. அதுவும் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன் கோலியுடைய விக்கெட். நியூசிலாந்தின் போல்ட் பந்தில் சரியாக எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார். அவரும் அவுட்டாகும் போது வெறும் 1 ரன்தான் எடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மோசம்

மோசம்

அதற்கு அடுத்த விக்கெட் லோகேஷ் ராகுலுடைய விக்கெட். இவரும் அதே டாம் லதாம் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இவரும் 1 ரன்கள் எடுத்து இருந்த போதுதான் அவுட்டானார். இப்படி இந்திய டாப் பேட்ஸ்மேன்கள் எல்லோரும் வரிசையாக விக்கெட்டை இழந்ததால் தற்போது இந்திய அணி திணறி வருகிறது.

என்ன காரணம்

என்ன காரணம்

போட்டி நடக்கும் மான்செஸ்டர் ஓல்ட் டிரபோர்ட் மைதானம் நேற்று பேட்டிங் பிடிக்க சாதகமாக இருந்தது. ஆனாலும் இந்திய அணியின் சிறப்பான பவுலிங் காரணமாக பெரிய அளவில் நேற்று ரன் செல்லவில்லை. ஆனால் இன்று பிட்ச் மொத்தமாக பவுலிங் பிட்சாக மாறி இருக்கிறது.

என்ன நடக்குமோ

என்ன நடக்குமோ

இதனால் நியூசிலாந்து பவுலர்கள் பந்து வீச்சை இந்திய வீரர்களால் சுத்தமாக சமாளிக்க முடியவில்லை. உலகின் இரண்டு டாப் பேட்ஸ்மேன்கள் இதனால் மோசமாக தங்கள் விக்கெட்டை இழந்து இருக்கிறார்கள். இந்த பிட்ச் பவுலிங் செய்ய சாதகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, July 10, 2019, 16:12 [IST]
Other articles published on Jul 10, 2019
English summary
ICC World Cup 2019: Team India's top order collapsed against NZ - Here is the reason.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+