Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இங்கிலாந்தில் குடும்பத்தோடு மாட்டிக்கொண்ட இந்திய அணி.. இப்போது திரும்ப முடியாது.. ஏன் தெரியுமா?

Recommended Video

இந்திய அணி இப்போது திரும்ப முடியாது.. ஏன் தெரியுமா?

லண்டன்: உலகக் கோப்பை போட்டிகளில் விளையாட சென்ற இந்திய அணி வீரர்கள் தற்போது இங்கிலாந்தில் குடும்பத்தோடு மாட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

கடந்த புதன் கிழமை, நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான செமி பைனல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்தது. இந்த தோல்வியை அடுத்து இந்தியா உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறது.

இதனால் இந்தியாவின் உலகக் கோப்பை பயணம் முடிவிற்கு வந்துள்ளது. பைனலுக்கு நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் தேர்வாகி உள்ளது.

என்ன டிக்கெட்

என்ன டிக்கெட்

இந்திய அணி வீரர்கள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இதனால் அதற்கு ஏற்றபடியே ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. வீரர்களுக்கு இறுதிப் போட்டிக்கு பின்பாகவே இந்தியா திரும்பி வர டிக்கெட்டுகள் புக் செய்யப்பட்டு இருந்தது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்திய அணி யாரும் எதிர்பார்க்காமல் செமி பைனல் போட்டியில் தோல்வியை தழுவியது. இதையடுத்து வீரர்களுக்கு உடனே டிக்கெட் புக் செய்ய முடியவில்லை. வீரர்கள் எல்லோரும் குடும்பத்துடன் வந்திருந்ததால் எல்லோரும் செல்லும் வகையில் அவர்களுக்கு டிக்கெட் புக் செய்ய முடியவில்லை.

இருக்கிறார்கள்

இருக்கிறார்கள்

ஆகவே எப்போதும் போல் வீரர்கள் உலகக் கோப்பை போட்டி முடிந்துதான் வீட்டிற்கு செல்ல முடியும். இதனால் வரும் திங்கள் கிழமைதான் இந்திய வீரர்கள் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேவையில்லாமல் நாளை மறுநாள் வரை வீரர்கள் இங்கிலாந்தில் தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் .

என்ன செய்கிறார்கள்

என்ன செய்கிறார்கள்

வீரர்கள் எல்லோரும் தற்போது இங்கிலாந்தில் தங்கள் குடும்பத்தோடு ஊர் சுற்றி வருகிறார்கள். இங்கிலாந்தில் உள்ள பல்வேறு சுற்றுலாதலங்களுக்கு அவர்கள் சென்று வருகிறார்கள். இந்த தொடரில் தோல்வி அடைந்தாலும் இந்திய வீரர்களுக்கு நல்ல விதத்தில் வரவேற்பு கொடுக்க டெல்லியில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Story first published: Friday, July 12, 2019, 17:17 [IST]
Other articles published on Jul 12, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+