Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஏன் இப்படி?.. ஜிபிஎஸ் டிராக்கர்களை வைத்து வீரர்களை கண்காணிக்கும் இந்திய அணி.. என்ன நடந்தது?

Recommended Video

BCCI GPS Tracker : ஜிபிஎஸ் டிராக்கர்களை வைத்து வீரர்களை கண்காணிக்கும் இந்திய அணி- வீடியோ

லண்டன்: இந்திய அணியில் உள்ள வீரர்கள் எல்லோரையும் அணி நிர்வாகம் ஜிபிஎஸ் கருவி மூலம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

முக்கிய காரணம் ஒன்றுக்காக இந்திய அணி இப்படி செய்து வருகிறது. உலகில் மிகவும் வலுவான, தலை சிறந்த அணியாக இந்திய கிரிக்கெட் அணி உருவெடுத்துள்ளது.

இந்திய அணியில் தற்போது இருக்கும் ஒவ்வொரு வீரர்களும் தனிப்பட்ட வகையில் மிகவும் திறமையான, வலிமையான வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இவர்களை கண்காணிக்கத்தான் இந்திய அணி நிர்வாகம் புதிய முறை ஒன்றை பயன்படுத்தி வருகிறது.

கண்டிப்பு

கண்டிப்பு

இந்திய அணியில் உள்ள வீரர்கள் எல்லோரும் தனியார் நிறுவனம் ஒன்று மூலம் தயாரிக்கப்பட்ட ரிஸ்ட் பேண்ட்களை பயன்படுத்தி வருகிறார்கள். இதை எல்லா வீரர்களும் பயிற்சியின் போதும், விளையாடும் போதும் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும் என்று கண்டிப்புடன் கூறப்பட்டுள்ளது. இதை உலகக் கோப்பை தொடர் முழுக்க வீரர்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஏன்

ஏன்

பொதுவாக வீரர்கள் செய்யும் பயிற்சி, எவ்வளவு தூரம் நடக்கிறார்கள். எவ்வளவு கலோரிகளை குறைத்து இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் எல்லா விஷயங்களும் இதில் பதிவாகும். இதற்காக இந்திய அணி நிர்வாகம் தனி சாப்ட்வேர் ஒன்றை கூட உருவாக்கி உள்ளனர். அதன் மூலம் வீரர்கள் குறித்த டேட்டாக்களை உருவாக்குவார்கள். இதை வைத்து வீரர்களை நிர்வாகம் கண்காணித்து வருகிறது.

எப்படி உதவும்

எப்படி உதவும்

வீரருக்கு பயிற்சி அளிக்கும் போது அவர்களுக்கு இந்த டேட்டா புள்ளி விவரம் உதவும். யாருக்கு ஓய்வு அளிக்க வேண்டும். யார் கூடுதல் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த ஜிபிஎஸ் டேட்டாவை பார்த்து எளிதாக புரிந்து கொள்ள முடியும். இப்படித்தான் கடந்த போட்டியில் சாஹலுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நல்ல முன்னேற்றம்

நல்ல முன்னேற்றம்

இதை வைத்து வீரர்களை தொடர்ந்து கண்காணிப்போம். இந்த டேட்டா விவரங்களை கண்காணிக்க தனி குழு இருக்கிறது. அவர்கள்தான் எங்களுக்கு உதவுகிறார்கள். இதை வைத்து பயிற்சிகளை வடிவமைப்பது மிக மிக எளிதாக இருக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் கோலி தெரிவித்து இருக்கிறார்.

Story first published: Tuesday, July 9, 2019, 14:12 [IST]
Other articles published on Jul 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+