Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்த ஒரு போட்டிதான்.. தினேஷ் கார்த்திக் வாழ்க்கையை மாற்றியது.. கோலியின் மனதை மாற்றிய நிகழ்வு!

Recommended Video

WORLD CUP 2019: IND VS BAN | DINESH KARTHICK | மகுடம் சூடும் தினேஷ் கார்த்திக்!-வீடியோ

லண்டன்: வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றம் ரசிகர்களை ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தற்போது இந்தியா வங்கதேசம் அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

கேதார் ஜாதவ் தற்போது அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக தற்போது அணியில் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் கடந்த போட்டியில் சரியாக பந்து வீசாத குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு அவருக்கு பதில் புவனேஷ்வர் குமார் சேர்க்கப்பட்டுள்ளார்.

சந்தோசம்

சந்தோசம்

தினேஷ் கார்த்திக் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து இந்திய அணியில் வாய்ப்பு பெறுகிறார். முதல்முறை தன்னுடைய கிரிக்கெட் வரலாற்றில் உலகக் கோப்பையில் ஆடும் அணியில் இடம்பெற்றுள்ளார். இது தமிழர்களை பெரிய அளவில் சந்தோசத்திற்கு உள்ளாக்கி உள்ளது.

அந்த தொடர்

அந்த தொடர்

கடந்த வருடம் இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் இடையே முத்தரப்பு டி 20 நிதாஸ் கோப்பை போட்டி நடைபெற்றது. இதில் இறுதிப் போட்டி வங்கதேசம் மற்றும் இந்தியா இடையே நடந்தது. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா வெற்றிபெற்று நிதாஸ் கோப்பையை வென்றது.

வைரல் ஆனார்

வைரல் ஆனார்

இறுதிப்போட்டியில் இந்தியா பேட்டிங் செய்த போது கடைசி இரண்டு ஓவரில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மிகவும் அதிரடியாக ஆடினார். கடைசி இரண்டு ஓவரில் மொத்தம் தினேஷ் கார்த்திக் 8 பந்துகள் பிடித்தார். இதில் 3 சிக்ஸ் இரண்டு பவுண்டரி அடித்தார், மொத்தம் 29 ரன்கள் எடுத்தார். ஒரே போட்டியின் மூலம் இவர் கிரிக்கெட் உலகின் சூப்பர் ஸ்டார் ஆகியுள்ளார்.

செம வாய்ப்பு

செம வாய்ப்பு

அதுவரை இந்திய அணியில், கிரிக்கெட் உலகில் பெரிய அளவில் கண்டுகொள்ளப்படாத இவர் அதன்பின்தான் கவனம் பெற்றார். இவருக்குள் இப்படி ஒரு திறமை இருக்கிறது என்பதே அப்போதுதான் பலருக்கு தெரிந்தது. அதுவும் அந்த போட்டியில் கடைசியில் அவர் சிக்ஸ் அடித்து வெற்றி தேடித்தந்தது பெரிய வைரலானது. அந்த போட்டிதான் கோலியை, ரோஹித்தை எல்லாம் தினேஷ் கார்த்திக் பக்கம் திரும்பி பார்க்க வைத்தது. இதுதான் இப்போது அவருக்கு வாய்ப்பை தேடி தந்துள்ளது.

இப்போது வாய்ப்பு

இப்போது வாய்ப்பு

தினேஷ் கார்த்திக் மிகவும் திறமையான வீரர் என்று தெரிந்தும் பிசிசிஐ நிர்வாகம் இவருக்கு வாய்ப்பு அளிக்கவே இல்லை. தோனி இல்லாத சமயங்களில் மட்டுமே இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் கூட பர்தீவ் பட்டேலுக்கு வாய்ப்பு கொடுத்து தினேஷ் வாய்ப்பை பறித்த கதை நடந்து இருக்கிறது. தற்போதுதான் அவருக்கான உண்மையான வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதே அணி

அதே அணி

அதுவும் தான் திறமையை நிரூபித்த அதே வங்கதேசம் அணிக்கு எதிராக தினேஷ் கார்த்திக் களமிறங்குகிறார். வங்கதேசம் அணி இன்று யாருக்கு பயப்படுகிறதோ இல்லையோ கண்டிப்பாக தினேஷ் கார்த்திக்கை பார்த்து கண்டிப்பாக பயப்படும். ஏன் என்றால் கடைசி பந்தில் அடித்த அந்த பிளாட் சிக்ஸ் இன்னும் அவர்களுக்கு மறக்க முடியாத ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கும்.

Story first published: Tuesday, July 2, 2019, 16:09 [IST]
Other articles published on Jul 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+