Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டிவிஸ்ட்.. அந்த 7 பால்தான் போட்டியை மாற்றியது.. இந்தியாவின் வெற்றிக்கு காரணமான 10 நிமிடம்!

லண்டன்: ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நேற்று நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான 7 பந்துகள்தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்தது மிகப்பெரிய அதிசய சம்பவம் என்றுதான் கூற வேண்டும். ஆம் இந்தியாவிடம் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்து இருக்கிறது. அதுவும் சேஸ் செய்யும் போது தோல்வி அடைந்து இருக்கிறது.

கடந்த 20 வருடங்களில் ஆஸ்திரேலியா முதல்முறை இப்படி சேசிங்போது உலகக் கோப்பை போட்டி ஒன்றில் தோல்வி அடைகிறது. இந்திய அணியின் வெற்றிக்கு பின் முக்கியமான 7 பந்துகள் காரணமாக இருக்கிறது.

இந்தியா பேட்டிங்

இந்தியா பேட்டிங்

இதில் முதலில் களமிறங்கிய இந்திய அணி, 5 விக்கெட்டிற்கு 352 ரன்கள் எடுத்தது. இந்திய பேட்ஸ்மேன்கள் எல்லோரும் அதிரடியாக ஆடினார்கள். ரோஹித் சர்மா 57, தவான் 117, கோலி 82, பாண்டியா 48, தோனி 27, கே எல் ராகுல் 11 ரன்கள் எடுத்தனர். களமிறங்கிய எல்லா வீரர்களும் ஏமாற்றாமல் அதிரடியாக அடித்து துவைத்தார்கள்.

ஆஸ்திரேலியா எவ்வளவு

ஆஸ்திரேலியா எவ்வளவு

ஆஸ்திரேலியா அணியில் ஸ்டோனிஸ் மட்டும் அதிகமாக 2 விக்கெட் எடுத்தார். வேறு பவுலர்கள் பெரிதாக நேற்று அச்சுறுத்தல் தரவில்லை. பேட்டிங்கின் போது, இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியா அணி மிகவும் நிதானமாக ஆடியது. ஸ்மித் 69, வார்னர் 56, கேரி 55 ரன்கள் எடுத்தனர். 50 ஓவர் முடியும் போது அந்த அணி அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஆஸ்திரேலியா 10 விக்கெட்டிற்கு 318 ரன்கள் மட்டும் எடுத்தது.

என்ன விக்கெட்

என்ன விக்கெட்

நேற்றைய போட்டியில் பும்ரா, புவனேஷ்வர் குமார் 3 விக்கெட் எடுத்தனர். இவர்கள் இருவரும்தான் போட்டியின் போக்கை மாற்றியது என்று கூட கூறலாம். சாஹல் மொத்தம் 2 விக்கெட் எடுத்தார். 36 வது ஓவரில் உஸ்மான் குவாஜா ஆட்டமிழந்த பிறகு ஸ்டோனிஸ் களமிறங்கினார். அவர் ஸ்மித்துடன் சேர்ந்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயற்சி செய்தார்.

மோசம்

மோசம்

இவர்கள் இருவரும் மிகவும் வலுவான பேட்ஸ்மேன்கள். ஆனால் புவனேஷ்வர் குமார் போட்ட 40வது ஓவரின் 4 வது பந்தில்தான் அந்த மாற்றம் நடந்தது. அதிரடியாக ஆடிக்கொண்டு இருந்த ஸ்மித் புவனேஷ்வர்குமார் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அதே ஓவரில் கடைசி பந்தில் ஸ்டோனிஸ் போல்டானார். இந்த இரண்டு பந்துகள் ஆட்டத்தின் போக்கை மாற்றியது.

அதன்பின்

அதன்பின்

அடுத்த ஓவரிலேயே ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சி காத்து இருந்தது. 41வது 4 வது பந்தில் ஓவரில் சாஹல் போட்ட பந்தை மேக்ஸ்வெல் பறக்கவிட்டார். அந்த பந்தை தாவி பிடித்து ஜடேஜா அவரை அவுட் செய்தார். இதனால் ஆஸ்திரேலியா நம்பி இருந்து மூன்று வீரர்களும் பெவிலியன் திரும்பினார்கள். இது அனைத்தும் 10 நிமிடத்தில் நடந்தது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இதனால் வெறும் 7 பந்தில் அந்த அணிய மூன்று விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. அதன்பின் வந்த வீரர்களில் கேரி மட்டும் அதிரடியாக ஆடினார் என்றாலும் அவர்களால் வெற்றி இலக்கை எட்ட முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, June 10, 2019, 10:58 [IST]
Other articles published on Jun 10, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+