Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகக் கோப்பையில் இது மிகப்பெரிய அதிர்ச்சி.. இன்னும் 2 போட்டிதான்.. ஷாக்கிங் செய்தி காத்திருக்கு!

Recommended Video

WORLD CUP 2019 | இங்கிலாந்து வெளியேற்றம்?.. உலகக் கோப்பையில் நடக்கும் திருப்பம்- வீடியோ

லண்டன்: உலகக் கோப்பையில் எல்லோருக்கும் அதிர்ச்சி அளிக்க கூடிய முக்கியமான விஷயம் ஒன்று இன்னும் ஒரு வாரத்தில் நடக்க வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த உலகக் கோப்பைதான் எத்தனை டிவிஸ்டுகளையும் மாற்றங்களையும் சுமந்து நடந்து வருகிறது. வங்கதேசம் அணி அதிசயமாக அதிரடியாக விளையாடி வெற்றிகளை குவித்து வருகிறது.

மாறாக தென்னாப்பிரிக்கா அணி, ஆப்கானிஸ்தான் அளவிற்கு மோசமாக விளையாடி தோல்விகளை தழுவி வருகிறது. செமி பைனலுக்கு செல்லும் வாய்ப்பையும் அந்த அணி இழந்துவிட்டது.

தற்போது என்ன

தற்போது என்ன

இந்த உலகக் கோப்பை தொடரில் கோப்பை வெல்ல கூடிய அணிகளில் ஒன்றாக இங்கிலாந்து அணி பார்க்கப்பட்டது. அதற்கு நிறைய காரணங்கள் இருந்தது. ஏனென்றால் இந்த உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடக்கிறது. அதேபோல் இங்கிலாந்து வீரர்கள் எல்லோரும் மிக சிறந்த பார்மில் இருக்கிறார்கள். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இங்கிலாந்து வீரர்கள் தங்கள் வாழ்நாள் பார்மில் இருக்கிறார்கள்.

ஆர்டர் அப்படி

ஆர்டர் அப்படி

தற்போது உலகக் கோப்பையில் விளையாடும் அணிகளில் சிறந்த பேட்டிங் ஆர்டரை கொண்ட அணிதான் இங்கிலாந்து. அதன் பவுலிங் அட்டாக்கும் சிறப்பாக இருக்கிறது. இதனால் இங்கிலாந்து அணி எப்படியும் இறுதி போட்டிக்கு சென்றுவிடும் என்றுதான் சுந்தர் பிச்சை கூட கணித்து இருந்தார். தொடக்கத்தில் இங்கிலாந்து அணியும் வெற்றிகளை குவித்து வந்தது.

ஆனால் தோல்வி

ஆனால் தோல்வி

ஆனால் இங்கிலாந்து அணி பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்ததுதான் முதல் அதிர்ச்சியான விஷயம் ஆகும். பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரை போன மாதம்தான் இங்கிலாந்து கிளீன் வாஷ் அவுட் செய்தது. ஆனால் உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் அந்த அணி தோல்வி அடைந்தது. அதோடு மிக மோசமான பார்மில் இருக்கும் 10 புதிய வீரர்களை கொண்ட இலங்கை அணியிடமும் தோல்வி அடைந்தது.

என்ன சிக்கல்

என்ன சிக்கல்

இதனால் இங்கிலாந்து அணிக்கு ஒரு பெரிய சிக்கல் ஏற்பட்டது. அதன்படி அடுத்து நடக்கும் போட்டிகளில் இங்கிலாந்து வரிசையாக வெல்ல வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் இது நடப்பது மிக கடினம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்தனர். அதேபோல் தற்போது ஆஸ்திரேலியா அணியிடம் இங்கிலாந்து தோல்வி அடைந்து இருக்கிறது.

நேற்று தோல்வி

நேற்று தோல்வி

நேற்று முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 285 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி எளிதாக வெல்லும் என்று நினைத்தால், 44.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து வெறும் 221 ரன்கள்தான் எடுத்தது. 64 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி படுதோல்வி அடைந்தது. இதனால் அடுத்து வரும் இரண்டு போட்டியிலும் அந்த அணி கண்டிப்பாக வெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

கடந்த 27 வருடமாக, அதாவது 6 உலகக் கோப்பை போட்டியில் ஒரு முறை கூட இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை வென்றது கிடையாது. தற்போது மீண்டும் ஆஸ்திரேலியாவிடம் இங்கிலாந்து தோல்வி அடைந்துவிட்டது. அடுத்து இந்தியாவை 30ம் தேதியும், நியூசிலாந்தை 3ம் தேதியும் இங்கிலாந்து சந்திக்கிறது. இது இரண்டிலும் தோல்வி அடைந்தால் இங்கிலாந்து செமி பைனலுக்கு செல்ல முடியாது.

பெரிய அதிர்ச்சி

பெரிய அதிர்ச்சி

இந்த 10 நாட்களில் இங்கிலாந்து அணியின் உலகக் கோப்பை எதிர்காலம் என்னவென்று தெரிந்துவிடும் என்கிறார்கள். உலகக் கோப்பை போட்டியை நடத்தும் இங்கிலாந்து அந்த தொடரில் செமி பைனலுக்கு கூட செல்லாமல் வெளியேறும் அதிர்ச்சிகர சம்பவம் நடக்கவே அதிகம் வாய்ப்புள்ளது என்றுதான் கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, June 26, 2019, 10:53 [IST]
Other articles published on Jun 26, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+