இதுதான் பலவீனம்.. உண்மைகளை மறைக்கும் கோலி படை.. இன்று தெரிந்துவிடும்.. இந்திய அணிக்கு வார்னிங்!
லண்டன்: இந்திய அணி வரிசையாக வெற்றிகளை குவித்து வந்தாலும், சில இடங்களில் இந்திய அணி அவ்வளவு ஒன்றும் வலுவாக இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. இந்தியா தனது பலவீனத்தை இத்தனை நாட்கள் மறைத்து வந்தது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் இடையே இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இந்த தொடரில் இன்று நடக்கும் போட்டியில் வென்றால் இந்தியா செமி பைனலுக்கு செல்வது 90 சதவிகிதம் உறுதியாகிவிடும்.
அதனால் இன்று நடக்கும் போட்டியில் எப்படியாவது வெற்றியை ருசிக்க வேண்டும் என்று இந்தியா தீவிர திட்டம் போட்டுள்ளது. ஆனால் இந்திய அணிக்குள் சில பிரச்சனைகள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

தெரிந்தது
இந்திய அணிக்கு இருக்கும் பலவீனங்கள் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில்தான் அப்படியே வெளியே தெரிந்தது. மூன்று வீரர்கள் மட்டும் இல்லை என்றால் இந்திய அணி அவ்வளவுதான் என்ற நிலையில்தான் தற்போது நிலைமை இருக்கிறது. இதனால் எதிரணி வீரர்கள் இந்திய அணியின் மூன்று வீரர்களை கட்டுப்படுத்தினால் மட்டும் போதும். போட்டியை கைக்குள் கொண்டு வந்துவிடலாம்.

மூன்று பேர்
இந்திய அணியின் தொடக்க வீரர் ரோஹித் சர்மா, அதிரடி வீரர் கோலி மற்றும் கடைசியில் இறங்கி கலக்க கூடிய பாண்டியா ஆகியோர்தான் தற்போது இந்திய அணியின் ரட்சகர்களாக இருக்கிறார்கள். இந்திய அணியில் இருந்து தவான் காயம் காரணமாக விலகி இருப்பதால், அணியின் பலம் வெகுவாக குறைந்து இருக்கிறது. இது ஆப்கானிஸ்தான் போட்டியிலேயே அப்படியே தெரிந்தது.

அதேபோல் எப்படி
இவர்கள் மூவரையும் வீழ்த்திவிட்டால் இந்திய அணியை எளிதாக சமாளித்து விடலாம். கே எல் ராகுல் இன்னும் முழுமையான தொடக்க வீரராக செயல்படவில்லை. அதேபோல் கோலிக்கு பின் ஆடும் தோனி, விஜய் சங்கர், கேதார் ஜாதவ் என்று யாருமே பெரிய அளவில் வலுவான வீரர்களாக இருக்கவில்லை. கேதார் ஆடினாலும் தொடர்ந்து நிலையாக பார்மில் இருப்பதில்லை.

இன்னொரு சிக்கல்
இதனால் தொடக்க வீரர் ராகுல், தோனி, விஜய் சங்கர் ஆகியோரை வைத்து இந்திய அணியை எளிதாக எதிரணி வீரர்கள் சமாளித்து விடலாம். இந்த பலவீனத்தை இத்தனை நாட்கள் இந்திய அணி மறைத்துக் கொண்டு இருந்தது என்றுதான் கூற வேண்டும். ஆனால் தற்போது வெளியே தெரிந்துள்ளதால், மேற்கு இந்திய தீவுகள் இவர்களை மட்டும் குறி வைக்க வாய்ப்பு இருக்கிறது.

மாற்றம் முக்கியம்
இந்தியா உடனே தனது பேட்டிங் ஆர்டர் குறித்து பரிசீலனை செய்ய வேண்டும். அணியில் 4வது வீரராக புதிய வீரர் ஒருவர் களமிறங்கினால் இந்திய பேட்டிங் வலிமை பெறும். இது உடனே சரி செய்ய வேண்டும் என்று விமர்சகர்கள் இந்திய அணிக்கு வார்னிங் கொடுத்துள்ளனர். தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் களமிறங்கினால் கண்டிப்பாக இந்திய அணிக்கு வெற்றி நிச்சயம் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications