வருடம் முழுக்க பயந்தது இன்று நடந்துவிட்டது.. இந்திய அணியின் தோல்விக்கு பின் இப்படி ஒரு காரணமா?
Recommended Video
லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக செமி பைனல் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு என்ன காரணம் என்று தெரிய வந்துள்ளது. இந்திய அணி வருடம் முழுக்க பயந்த விஷயம் கடைசியில் இன்று நடந்துவிட்டது.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் செமி பைனல் போட்டி நடந்து முடிந்துள்ளது. கடைசி வரை போராடிய இந்திய அணி இதில் தோல்வியை தழுவி உள்ளது.
ஜடேஜா தோனி இருவரும் இந்திய அணிக்கு பெரிய அளவில் நம்பிக்கை அளித்தார்கள். ஆனாலும் நியூசிலாந்து அதிரடியாக ஆடி பைனலுக்கு சென்றுள்ளது.

என்ன மோசம்
இந்த தொடர் முழுக்க இந்திய அணியின் டாப் ஆர்டர்தான் போட்டியை தனது கட்டுக்குள் வைத்து இருந்தது. மிடில் ஆர்டர் எப்போதுமே இந்திய அணியில் மோசமாக சொதப்பிதான் வந்தது. முக்கியமாக 4-6 இடங்களில் களமிறங்கும் வீரர்கள் வரிசையாக அவுட்டாகி வந்தனர்.

முக்கியமாக
இதனால் கோலி, ரோஹித் சர்மா இருவரையும் அவுட் செய்துவிட்டால் இந்தியாவை கவிழ்த்து விடலாம் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் இந்த தொடர் முழுக்க இரண்டு வீரர்களும் ஆதிக்கம் செலுத்தினார்கள். இவர்களை விக்கெட் மட்டும் எடுக்க முடியவிலை.

ஆனால் கடைசி
ஆனால் கடைசியில் இன்று நடந்த போட்டியில் இவர்கள் இருவருமே 1 ரன்களில் அவுட்டாகி விட்டார்கள். கோலி, ரோஹித் இருவருமே இந்திய அணியை கைவிட்டுவிட்டார்கள்.இதுதான் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தது.

ஒரு வருடம்
இந்த ஒரு வருடமாகவே இந்திய அணியில் கிரிக்கெட் வல்லுநர்களுக்கு இந்த கேள்வி இருந்து கொண்டே இருந்தது. ரோஹித், கோலி இருவரும் சீக்கிரமே அவுட்டாகிவிட்டால் என்ன நடக்கும் என்று. கடைசியில் மிக முக்கியமான செமி பைனல் போட்டியில் இரண்டு பேரும் அவுட்டாகி இந்திய அணியின் தோல்விக்கு காரணமாகி உள்ளனர்.


Click it and Unblock the Notifications