வாழ்க்கை முழுக்க ஓடியவருக்கா இப்படி நடக்க வேண்டும்.. இந்திய அணியை அதிர வைத்த அந்த நொடி!
Recommended Video
லண்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தோல்வி அடைவதற்கு மிக முக்கியமான நொடி ஒன்று காரணமாகி இருக்கிறது. ஒரே ஒரு விக்கெட் இந்திய அணியை மொத்தமாக புரட்டிப் போட்டு உள்ளது.
இந்தியா தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து வெளியேறி உள்ளது. கடைசி வரை போராடிய இந்திய அணி கடைசி நொடியில் தோல்வியை தழுவி உள்ளது.
இதன் மூலம் நியூசிலாந்து தற்போது இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இந்த மோசமான தோல்வி இந்திய ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

வாய்ப்பு
இந்த போட்டியில் தொடக்கத்தில் இருந்து இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மோசமாக சொதப்பினார்கள். ஆனால் கடைசி நேரத்தில் தோனியும் ஜடேஜாவும் சேர்ந்து இந்திய அணியின் ஆட்டத்தை புரட்டிப் போட்டார்கள். இந்திய அணியின் ரசிகர்களுக்கு இவர்கள் தொடர்ந்து நம்பிக்கை அளித்தனர்.

செம
அதிலும் ஜடேஜா அவுட்டான பின்பும் கூட இந்தியா வெற்றிபெறும் என்ற நம்பிக்கை இருந்தது. தோனி களத்தில் இருக்கிறார். அவர் இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தருவார் என்ற நம்பிக்கை இருந்தது.

ஆனால் என்ன
ஆனால் தோனி தேவையில்லாமல் 48வது ஓவரில் ரன் அவுட் ஆனார். இந்திய அணிக்கு இரண்டு ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்ட நேரத்தில் தோனி அவுட்டானார். அவர் ரன் அவுட்டான நொடிதான் மொத்தமாக ஆட்டத்தை புரட்டிப்போட்டது.

செம
தோனி மிக வேகமாக ஓட கூடியதில் வல்லவர். இவரின் வேகமான ஓட்டம் உலகம் முழுக்க பிரபலமானது. ஆனால் இன்று அவரே ரன் அவுட் ஆனது பெரிய வருத்தம் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications