Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அட இது போதுமே.. இனி மாஸ் காட்டலாம்.. தோல்விக்கு இடையிலும் இந்திய அணிக்கு கிடைத்த சூப்பர் செய்தி!

லண்டன்: இந்திய அணி நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும் தோல்வி அடைந்து இருந்தாலும் கூட, நல்ல செய்தி ஒன்று இந்திய அணி நிர்வாகத்திற்கு கிடைத்து இருக்கிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி வருகிறது. இன்னும் இரண்டு வாரத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் யார் என்று தெரிந்துவிடும்.

இந்த தொடரில் தோல்வியையே ருசிக்காமல் இருந்த இந்திய அணி நேற்று இங்கிலாந்துக்கு எதிராக தோல்வி அடைந்தது. நேற்று போட்டியில் இந்தியாவிற்கு எதிராக மொத்தம் 50 ஓவரில் இங்கிலாந்து அணி 337 ரன்களை குவித்தது.

தோல்வி

தோல்வி

ஆனால் அதன்பின் களமிறங்கிய இந்தியா ஐம்பது ஓவரில் 306 ரன்கள் மட்டும் எடுத்தது. இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆனாலும் இந்திய அணி தொடர் புள்ளிகள் பட்டியலில் 2ம் இடத்தில்தான் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நல்ல செய்தி

நல்ல செய்தி

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்திய அணியில் மிடில் ஆர்டர் பிரச்சனை கொஞ்சம் தீர்க்கப்பட்டுள்ளது. நேற்று இந்திய அணிக்கு கிடைத்த ஒரே நல்ல செய்தி அதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆம் இந்திய அணிக்குள் நேற்று நுழைந்து உலகக் கோப்பையில் அறிமுகமான ரிஷப் பண்ட் சிறப்பாகவே ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடியாக ஆடினார்

அதிரடியாக ஆடினார்

நேற்று 4வது வீரராக களமிறங்கிய பண்ட் தொடக்கத்தில் இருந்து அதிரடியாக ஆடினார். 29 பந்தில் இவர் 32 ரன்கள் எடுத்தார். இதில் 4 பவுண்டரிகள் அடக்கம். இக்கட்டான சூழ்நிலையில் கூட இவர் அதிரடியாக ஆடினார். ஆனால் இவர் பெரிய அளவில் முகத்தில் டென்ஷனை காட்டவில்லை. முதல் உலகக் கோப்பை போட்டி போலவே அவர் ஆடவில்லை.

ஜாலியாக ஆடினார்

ஜாலியாக ஆடினார்

களத்தில் இறங்கிய நொடியில் இருந்தே ஜாலியாகவும், கொண்டாட்டமாகவும் ஆடினார். இவர் நேற்று போட்டியில் பெரிய ஆதிக்கம் செலுத்தவில்லை என்றாலும் கூட நல்ல துடிப்பாக ஆடினார். இந்த அதிரடிதான் இந்திய வீரர் விஜய் சங்கரிடம் தொடர்ந்து மிஸ்ஸானது. இதனால் தற்போது இந்திய அணிக்கு புதிய நல்ல 4வது வீரர் கிடைத்து விட்டார் என்ற சந்தோசத்தில் அணி நிர்வாகம் இருக்கிறது.

நடக்க வாய்ப்புள்ளது

நடக்க வாய்ப்புள்ளது

இதனால் அடுத்தடுத்த போட்டிகளில் பண்ட் இன்னும் அதிரடியாக ஆட வாய்ப்புள்ளது. மிடில் ஆர்டரில் இந்திய அணியின் ரன் ரேட்டை இவர் குறையாமல் பார்த்துக் கொள்வார். இன்னும் கேதார் ஜாதவ் மட்டும் அதிரடியாக ஆடினால், அல்லது அவர் இடத்தில் தினேஷ் கார்த்திக் ஆடினால், இந்தியா பேட்டிங் ஆர்டர் முழுமை பெற வாய்ப்பு இருக்கிறது.

Story first published: Monday, July 1, 2019, 14:11 [IST]
Other articles published on Jul 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+