For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆப்கான் சூழலில் அடங்கிய பேட்ஸ்மேன்கள்.. இந்திய அணியின் மோசமான பேட்டிங்கிற்கு பின் அதிர்ச்சி காரணம்!

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் மோசமாக சொதப்புவதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

லண்டன்: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் மோசமாக சொதப்புவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியன் திரும்ப அதிர்ச்சி காரணம் ஒன்று இருக்கிறது.

இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஆனால் போட்டியின் தொடக்கத்தில் இருந்தே இந்திய அணி வீரர்கள் மிக மோசமாக திணறி வந்தனர்.

எல்லோரும் அவுட்

எல்லோரும் அவுட்

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் மோசமாக சொதப்புவதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கே எல் ராகுல் நபி போட்ட சூழலில் ஒரு மோசமான ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சி செய்து மோசமாக அவுட்டானார். விஜய் சங்கரும் லெக் ஸ்டம்பை நோக்கி வந்த ரஹ்மத் போட்ட பந்தில் எல்பிடபிள்யூ ஆனார்.

கோலி சென்றார்

கோலி சென்றார்

அதன்பின் களமிறங்கிய கோலி மட்டும் இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தார். ஆனால் அவரும் தேவையில்லாமல் அவுட் ஆனார். அவர் நபி போட்ட எளிதான பந்தில் அவுட்டானார். கோலி பேட்டிங் சைட்டிற்கு வந்தவுடன், நபி சரியாக ஃபிளை திசையில் பீல்டரை நிற்க வைத்தார். சரியாக அவர் பிடித்த்த் கேட்சில் கோலி அவுட்டானார்.

தோனி அவுட்

தோனி அவுட்

அதன்பின் களமிறங்க தோனியும், கேதார் ஜாதாவும் டெஸ்ட் மேட்ச் ஆடிக்கொண்டு இருந்தனர். ஆனால் அதற்கும் கூட முடிவு வந்தது. தோனி 52 பந்தில் 28 ரன்கள் அடித்து இருந்த போது அவுட்டானார். இந்திய அணி இப்படி மோசமாக அவுட்டாக நிறைய காரணங்கள் இருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மட்டும் இதற்கு காரணம் கிடையாது.

இங்கிலாந்து

இங்கிலாந்து

பொதுவாக இங்கிலாந்து மீடியம் பாஸ்ட் பவுலர்களுக்கு ஏற்ற பிட்சைகளை கொண்டது. இதில் சில பிட்சுக்கள் முழுக்க முழுக்க பவுலிங்கிற்கு சாதகமாக இருக்கும். சில பிட்சுக்கள் ஸ்லோ பால் பிட்சுக்கள் ஆகும். இன்று போட்டி நடந்த ரோஸ் பவுல் மைதானம் அப்படிப்பட்ட ஸ்லோ பால் பிட்சுகளை கொண்டதுதான். இந்த பிட்சுக்கள் ஸ்பின் பவுலிங் செய்ய சாதகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மிக கஷ்டம்

மிக கஷ்டம்

பந்துகளை இங்கு கணித்து விளையாடுவது கடினம். மிக தாமதமாக பந்து ஸ்விங் ஆகும். இந்த பிட்சில் அதிரடியாக ஆடுவது என்பது மிக மிக கடினம். இதனால்தான் கோலியும், ரோஹித் சர்மாவும் கூட ஆப்கானிஸ்தான் பவுலிங்கில் சொதப்பினார்கள். ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா பவுலிங்கை சமாளித்தவர்கள் கூட இவர்களிடம் சொதப்ப இது முக்கியமான காரணம் ஆகும்.

Story first published: Saturday, June 22, 2019, 18:59 [IST]
Other articles published on Jun 22, 2019
English summary
ICC World Cup 2019: This is the reason for India's worst batting show against Afghanistan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+