Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவரின் காத்திருப்புக்கு என்ன பதில் சொல்வீர்கள்.. தொடர் அவமானங்களால் கலங்கி நிற்கும் சென்னை வீரர்!

Recommended Video

WORLD CUP 2019: VIJAY SHANKAR RULED OUT | தவானை தொடர்ந்து விஜய் சங்கரும் காயத்தால் விலகல்- வீடியோ

லண்டன்: இந்திய அணியின் முக்கியமான வீரர் ஒருவர் எவ்வளவு நன்றாக ஆடியும், உடல் தகுதியை நிரூபித்தும் கூட இந்திய அணிக்குள் தேர்வாகாமல் இருக்கிறார்.

வீரர்களுக்கு ஏற்படும் தொடர் காயம் காரணமாக இந்திய அணிக்குள் நிறைய பிரச்சனைகள் நிலவி வருகிறது. வாரம் புதிய ஒரு வீரரை டெல்லியில் இருந்து லண்டன் அனுப்ப வேண்டிய நிலைக்கு இந்திய அணி நிர்வாகம் தள்ளப்பட்டு இருக்கிறது.

நேற்று இந்திய அணியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்திய அணியில் தவானை தொடர்ந்து இளம் வீரர் விஜய் சங்கரும் காயம் காரணமாக அணியில் இருந்து விலகி இருக்கிறார்.

எப்படி காயம்

எப்படி காயம்

பயிற்சியின் போது பும்ரா போட்ட யார்க்கரால் அவருக்கு கால் விரலில் காயம் ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு முறை இவருக்கு இப்படி காயம் ஏற்பட்டுள்ளது. கால் விரலில் அவருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக தற்போது உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார்.

மாற்று வீரர்

மாற்று வீரர்

இவருக்கு பதிலாக மாற்று வீரராக மயங்க் அகர்வால் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இவரை இந்திய அணி நிர்வாகம் இன்று லண்டன் அனுப்ப வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அணியில் மாற்று வீரர்களாக முதலில் உலகக் கோப்பை தொடருக்கு முன் அறிவிக்கப்பட்டவர்கள் ராயுடு, அக்சர் பட்டேல், நவ்தீப் சைனி மற்றும் இஷாந்த் சர்மா மட்டுமே. ஆனால் அவர்களுக்கு பதில் மயங்க் சேர்க்கப்பட உள்ளார்.

மிக வருத்தம்

மிக வருத்தம்

முதலில் விஜய் சங்கர் மற்றும் அம்பதி ராயுடு ஆகியோருக்கு இடையில்தான் இந்திய அணியில் பெரிய போட்டி நிலவியது. அம்பதி ராயுடுவிற்கு பதிலாகத்தான் விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தற்போது விஜய் சென்ற பின்பும் கூட அம்பதி ராயுடு தேர்வு செய்யப்படவில்லை. இது ஏன், தொடர்ந்து அம்பதி ராயுடு ஏன் புறக்கணிக்கப்படுகிறார் என்று பல கேள்விகள் எழுந்துள்ளது.

அம்பதி ராயுடு பாவம்

அம்பதி ராயுடு பாவம்

அம்பதி ராயுடு 55 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கிறார். இதில் 3 சதம் அடித்துள்ளார். ஆனால் மயங்க் அகர்வால் ஒரு ஒருநாள் போட்டியில் கூட விளையாடியது கிடையாது. அப்படி இருக்கும் போது ஏன் அகர்வாலை எடுக்கிறார்கள். என்ன அரசியல் இது என்று பலர் கேள்வி எழுப்பி இருக்கிறார். இத்தனை வருடமாக காத்திருந்தும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

எப்படிப்பட்டவர்

எப்படிப்பட்டவர்

பெரும்பாலும் அம்பதி ராயுடுவிற்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை போட்டியாக இருக்கும் என்கிறார்கள். ஆனாலும் அவருக்கு இதிலும் வாய்ப்பு கிடைக்காது. ஆந்திராவை சேர்ந்த இவர் சென்னையில்தான் வளர்ந்தார். நன்றாக தமிழ் பேச கூடிய இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

Story first published: Tuesday, July 2, 2019, 7:52 [IST]
Other articles published on Jul 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+