Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் கடைசி சான்ஸ்.. ஆனால் இன்றும் வாய்ப்பில்லை.. 15 வருடம் காத்திருந்து ஏமாறும் இந்திய வீரர்!

Recommended Video

World Cup 2019: Dinesh karthik: இன்றும் வாய்ப்பில்லை..15 வருடம் காத்திருந்து ஏமாறும் இந்திய வீரர்!

லண்டன்: இந்திய அணியின் மிக முக்கியமான வீரர் ஒருவருக்கு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கை நழுவி போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வருகிறது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட வேண்டும் என்ற ஆசை எல்லா கிரிக்கெட் வீரர்களுக்கும் இருக்கும். அதிலும் இந்தியா போன்ற பெரிய கிரிக்கெட் ரசிகர்களை கொண்ட நாடுகளில் உலகக் கோப்பையில் ஆட வேண்டும் என்ற ஆசை எல்லா ரசிகர்களுக்கும் இருக்கும்.

இந்த நிலையில்தான் இந்திய அணியின் மிக முக்கியமான வீரரான தினேஷ் கார்த்திக் உலகக் கோப்பை தொடரில் ஒரு போட்டியிலாவது விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எப்படி

எப்படி

உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் தேர்வாவதற்கு பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக்கிற்கு இடையில் கடுமையான போட்டி நிலவி வந்தது. கடைசியில் அனுபவம் கருதி தினேஷ் கார்த்திக் அணியில் எடுக்கப்பட்டார். ஆனால் அவருக்கு இன்னும் இந்த தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

அறிமுகம்

அறிமுகம்

தினேஷ் கார்த்திக் 2004ல் இந்திய அணியில் அறிமுகம் ஆனார். கீப்பராக அறிமுகம் ஆன இவர் தோனியின் வருகைக்கு பின் மொத்தமாக ஓரங்கட்டப்பட்டார். அவ்வப்போது அணியில் வாய்ப்பு கிடைத்து விளையாடி வந்த இவர் இங்கிலாந்தில் நடந்த நிதாஸ் கோப்பையில்தான் தன்னுடைய திறமையையும் நிரூபித்தார். ஆனாலும் இவர் உலகக் கோப்பை தொடரில் இப்போது வரை களமிறக்கப்படவில்லை.

2007ல் என்ன

2007ல் என்ன

2007ல் ராகுல் டிராவிட் தலைமையில் சென்ற உலகக் கோப்பை அணியில் இவர் இடம்பெற்று இருந்தார். ஆனால் அப்போதும் அவருக்கு அணியில் களமிறங்கி விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போதும் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் அவர் கஷ்டப்பட்டு வருகிறார்.

என்ன நடக்குமா

என்ன நடக்குமா

இவருக்கு இப்போதே 34 வயதாகிவிட்டது. அடுத்த உலகக் கோப்பை போட்டியில் இவர் விளையாடுவது சந்தேகம்தான். இன்று ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தினேஷ் கார்த்திக் இறங்கவில்லை என்றால் இந்த தொடரில் இனி இவர் விளையாட வாய்ப்பே கிடைக்காது. இனி வரும் போட்டிகள் கடினமான போட்டிகள் என்பதால் தினேஷ் கார்த்திக் வாய்ப்பு பெறுவது கடினம்.

இன்று பண்ட்

இன்று பண்ட்

ஆனால் இன்று பண்ட்தான் அணியில் இடம்பிடிப்பார் என்று செய்திகள் வருகிறது. அதனால் தினேஷ் கார்த்திக்கு உலகக் கோப்பையில் விளையாடும் கடைசி வாய்ப்பும் பறிபோகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Saturday, June 22, 2019, 12:34 [IST]
Other articles published on Jun 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+