For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இவரை சமாளிக்க வேண்டும்.. ஆனால் முடியாது.. இந்தியாவின் திட்டங்களை தூசு தட்ட போகும் நியூசி. வீரர்!

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டியில் நியூசிலாந்து பவுலர் ஒருவர் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

லண்டன்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டியில் நியூசிலாந்து பவுலர் ஒருவர் இந்திய அணியின் பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று உலகக் கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில் மிக முக்கியமான இரண்டு அணிகள் மோதிக்கொள்கிறது. வலுவான இந்திய அணியும், திறமையான நியூசிலாந்து அணியும் இன்று ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்கிறது.

இரண்டு அணிகளும் இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை ஆடிய போட்டிகளில் தோல்வியை தழுவ வில்லை. இதனால் இன்றைய போட்டி அதிக கவனம் பெற்றுள்ளது.

ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்

ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்

இந்த தொடரில் தொடக்கத்தில் இருந்தே இந்தியா அதிகம் செலுத்தி வருகிறது. முக்கியமாக இந்திய அணியின் பவுலர்கள் மிகவும் சிறப்பாக பந்து வீசுகிறார்கள். பும்ரா பந்து வீச்சில் முன்னிலையில் இருக்கிறார். புவனேஷ்வர்குமார், சாஹல் இருவரும் பந்து வீச்சில் தெறிக்கவிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களும் அப்படித்தான்

அவர்களும் அப்படித்தான்

ஆனால் நியூசிலாந்து வீரர்களும் பந்து வீச்சில் சிறப்பாக இருக்கிறார்கள். நியூசிலாந்தின் முன்னணி பவுலர் டிரெண்ட் போல்ட் மிக மிக சிறப்பாக இந்த முறை பார்மில் இருக்கிறார். இவரின் வேகப்பந்து வீச்சை சமாளிப்பது மிகவும் கடினமான விஷயம் ஆகும். இந்திய வீரர்களுக்கு அவர் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.

முக்கியமானவர்

முக்கியமானவர்

ஆனால் இந்திய அணிக்கு போல்டை விட லோகி பெர்குசான் பெரிய அச்சுறுத்தலாக இருக்க போகிறார் என்கிறார்கள். ஏனென்றால் இந்த உலகக் கோப்பை தொடரில், லோகிதான் அதிக டாட் பந்து மற்றும் விக்கெட்டுகளை எடுக்கும் வீரராக இருக்கிறார். அதிக விக்கெட் எடுக்கும் வீரர்கள் பட்டியலில் நேற்று வரை இவர்தான் முதலிடத்தில் இருந்தார்.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

இன்று அவர் இரண்டாம் இடம் பிடித்து உள்ளார். நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிராக பாகிஸ்தான் வீரர் அமீர் 5 விக்கெட்டுகளை எடுத்தார். இதனால் அவர் தற்போது அதிக விக்கெட் எடுத்த பவுலர்களில் முதல் இடம் வகிக்கிறார். இதனால் லோகி தற்போது மூன்று போட்டிகளில் 8 விக்கெட்டுகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளார்.

மிக முக்கியம்

மிக முக்கியம்

இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக இவர் இப்போதே நிறைய திட்டங்களை வகுத்துள்ளார் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள். முக்கியமாக தொடக்க வீரர்களை விக்கெட் எடுக்க லோகி நிறைய திட்டங்களை வகுத்துள்ளார் என்று கூறுகிறார்கள். இவர் இந்திய அணிக்கு மிகவும் சவாலான பவுலராக இருப்பார் என்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஸ்டார்க் எப்படி

ஸ்டார்க் எப்படி

ஆஸ்திரேலிய பவுலர் ஸ்டார்க் மீது இந்தியா எப்படி எச்சரிக்கையாக இருந்ததோ, அதேபோல்தான் லோகி பந்து வீசுவார். அவரை சமாளிக்க இந்திய அணி புதிய திட்டம் போட வேண்டும். இந்திய அணி தனது பேட்டிங்கில் சரியாக கவனம் செலுத்தினால்தான் லோகியை சமாளிக்க முடியும் என்று கூறுகிறார்கள்.

Story first published: Thursday, June 13, 2019, 12:50 [IST]
Other articles published on Jun 13, 2019
English summary
ICC World Cup 2019: This New Zealand pacer may a threat to the Indian team batsmen.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+