Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தல தலதான்.. இந்த ஒரு வீடியோ போதும்.. இந்திய அணியின் ஒற்றுமைக்கு சூப்பர் உதாரணம் - வீடியோ!

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் ஒற்றுமைக்கு உதாரணமாக சூப்பர் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கடந்த புதன் கிழமை தனது முதல் போட்டியை விளையாடியது. மற்ற அணிகள் எல்லாம் வரிசையாக நிறைய போட்டிகள் விளையாடிய நிலையில் , பிசிசிஐயின் அழுத்தம் காரணமாக இந்திய அணிகளுக்கு போட்டிகள் தாமதமாக தொடங்கியது.

இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் களமிறங்கியது.

எப்படி ஆடியது

எப்படி ஆடியது

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தென்னப்பிரிக்கா அணி தொடக்கத்தில் வரிசையாக விக்கெட்டை இழந்தது. டு பிளசிஸ் மற்றும் கிறிஸ் மோரிஸ் மட்டும் கொஞ்சம் ஆடி அணிக்காக ரன்களை சேர்த்தார்கள். டு பிளசிஸ் 38 ரன்கள் மற்றும் கிறிஸ் மோரிஸ் 42 ரன்கள் எடுத்தனர்.

எத்தனை ரன்கள்

எத்தனை ரன்கள்

இதனால் அந்த அணி திணறி திணறி 227 ரன்கள் எடுத்தது. ஆனால் அந்த ரன்னை எடுக்கவே இந்திய அணி மோசமாக திணறியது. தென்னாப்பிரிக்கா அணியை இந்திய அணி 200 ரன்களுக்குள் சுருட்டும் என்று என்று எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

எப்படி வெற்றி

எப்படி வெற்றி

அதன்பின் களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே தவான் மாற்று கோலியின் விக்கெட்டுகளை இழந்தது. இது இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அதன்பின் ரோஹித் சர்மா மட்டுமே 122 ரன்கள் அடித்தார். தவான், கோலி, கே எல் ராகுல் என்று எல்லோரும் ஏமாற்றம் அளித்தார்கள்.

செம மேட்ச்

செம மேட்ச்

இந்திய அணியின் வெற்றிக்கு ரோஹித் சர்மா முக்கிய காரணமாக இருந்தார். கோலியின் விளையாட்டு இதில் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் ரோஹித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில்தான் இந்திய அணியின் ஒற்றுமைக்கு உதாரணமாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது .

வீடியோ

வீடியோ

இந்திய அணி பவுலிங் முடித்துவிட்ட செல்லும் போது வரிசையாக வீரர்கள் சென்று கொண்டு இருந்தார். அப்போது பெவிலியனில் நின்ற கோலி வீரர்களை வரவேற்றார். எல்லா வீரர்களும் உள்ளே செல்லும் வரை நின்று அவர்களுக்கு கை கொடுத்தார். வலுவான தென்னாப்பிரிக்கா அணியை எளிதாக சுருட்டியதால் கோலி இப்படி செய்தார். ரோஹித்திற்கும் அவர் கை கொடுத்தார்.

சிறப்பு

அதன்பின் முக்கியமாக தோனியும் ரோஹித்தும் ஒரே நேரத்தில் மோதிக்கொள்வது போல அருகருகே வந்தனர். அதன்பின் ரோஹித்தை பார்த்து சிரித்துவிட்டு தோனி அவருக்கு உள்ளே செல்ல வழிவிட்டார். தோனியின் இந்த பண்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இருக்கிறது. இதுதான் தற்போது வீடியோவாக வெளியாகி உள்ளது.

என்ன ஒற்றுமை

என்ன ஒற்றுமை

கடந்த சில நாட்களாக இந்திய அணிக்குள் தற்போது சில சில பிரச்சனைகள் நிலவி வருவதாக செய்திகள் வந்தது. யார் பெரிய ஆள் என்று ஈகோ நிலவி வருவதாக செய்திகள் வெளியானது. தற்போது அதெல்லாம் இல்லை, இந்திய அணி வீரர்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள் என்று இந்த வீடியோ நிரூபித்துள்ளது.

Story first published: Friday, June 7, 2019, 12:49 [IST]
Other articles published on Jun 7, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+