Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவங்க ரெஸ்ட் எடுக்கட்டும்.. நீங்க போய் பயிற்சி எடுங்க.. 2 வீரர்களுக்கு மட்டும் செக் வைத்த இந்திய அணி

லண்டன்: இந்திய அணியில் இரண்டு வீரர்கள் மட்டும் இன்றைய போட்டிக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்று இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. இரண்டு அணிகளும் மோதும் இந்த போட்டி இந்த தொடரில் இந்திய அணிக்கு திருப்பு முனையாக இருக்கும்.

இந்திய அணி வரிசையாக பெறும் வெற்றிகளை இந்த போட்டியிலும் தக்க வைத்துக்கொள்ள பார்க்கும். இந்த போட்டியில் வெல்வதன் மூலம் இந்திய அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடம் பிடிக்கும்.

ஆனால் இல்லை

ஆனால் இல்லை

ஆனால் இந்திய அணி வீரர்கள் இந்த போட்டிக்காக பயிற்சி செய்யவில்லை. ஆப்கானிஸ்தான் அணிதான் என்பதால் அவர்கள் யாரும் பயிற்சியில் ஈடுபடவில்லை. கடைசியாக இந்திய வீரர்கள் வியாழக்கிழமைதான் பயிற்சி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவர் மட்டும்

இருவர் மட்டும்

அதேசமயம் இந்திய அணியை சேர்ந்த முகமது ஷமி மற்றும் ரிஷப் பண்ட் இருவர் மட்டும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார்கள். நேற்று முழுக்க அவர்கள் இருவரும் பயிற்சி செய்தனர். எல்லோரும் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கும் நிலையில் இன்றும் அவர்கள் இருவரும் பயிற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ன காரணம்

என்ன காரணம்

இந்த இரண்டு வீரர்களும் இந்த உலகக் கோப்பை தொடரில் இதுவரை களமிறங்கவில்லை. இதனால் அவர்களுக்கு இங்கிலாந்து பிட்சின் நிலவரம் சரி வர தெரியாது. இதனால் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படும் வகையில் இன்றும் நன்றாக பயிற்சி எடுக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இதனால் காலையில் இருந்து இவர்கள் மீண்டும் பயிற்சி செய்து வருகிறார்கள்.

இன்னொரு காரணம்

இன்னொரு காரணம்

அதேபோல் ரிஷப் பண்டை இந்திய அணிக்குள் நிரந்தரமாக எடுக்க முயற்சிகள் நடந்து வருகிறது. அவரை ஐந்தாவது மற்றும் ஆறாவது இடத்தில் ஆட வைக்க தீவிரமாக முயற்சிகள் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். அப்படி அவர் களமிறங்கினால் இன்று அவர் தன்னை கண்டிப்பாக நிரூபித்தாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.

இதனால்தான்

இதனால்தான்

இதனால் தற்போது அவரும் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். பெரும்பாலும் இன்று இந்திய அணியில் கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, பாண்டியா, தோனி, ரிஷப் பண்ட், கேதார் ஜாதவ், ஷமி, பும்ரா, சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் களமிறங்க வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Saturday, June 22, 2019, 12:19 [IST]
Other articles published on Jun 22, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+