Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு எதிராக சதி?.. தொடர்ந்து சர்ச்சைக்கு உள்ளாக்கும் ஒரே விஷயம்.. ரசிகர்கள் குமுறல்!

லண்டன்: இந்திய அணிக்கு எதிராக நடுவர்கள் தொடர்ந்து சதி செய்கிறார்கள் என்று கிரிக்கெட் ரசிகர்கள் டிவிட்டரில் குமுறி இருக்கிறார்கள். இது தொடர்பாக வரிசையாக நிறைய பேர் டிவிட் செய்து வருகிறார்கள்.

இந்தியா வங்கதேசம் அணிக்கு அதிரடியாக 315 ரன்களை இலக்காக நிர்ணயித்து உள்ளது. இந்திய அணியில் ரோஹித் சர்மா 104, கே எல் ராகுல் 77 ரன்களை எடுத்து அதிரடி காட்டி இருக்கிறார்கள்.

இந்த வலுவான இலக்கை நோக்கி வங்கதேசம் ஆடி வருகிறது. இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

என்ன நடந்தது

என்ன நடந்தது

இந்த நிலையில் இந்த போட்டியில் ஷமி ஓவரில் ஷாகிப் அல் ஹசன் இன்சைட் எட்ஜ் ஆனார். இது பார்க்க எல்பிடபிள்யூ போல இருந்தது. பேட்டில் பந்து பட்டதற்கான அறிகுறியே தெரியவில்லை. இதனால் இதற்கு கோலி எல்பிடபிள்யூ என்று விக்கெட் கேட்டார். நடுவர்கள் இதற்கு விக்கெட் கொடுக்கவில்லை.

இல்லை

இல்லை

இதையடுத்து கோலி கீப்பராக இருந்த பண்டிடம் விக்கெட்டா என்று கேட்டார். அவரால் உறுதியாக சொல்ல முடியவில்லை. இதையடுத்து கோலி ரிவ்யூ கேட்டார். ஆனால் மூன்றாவது நடுவர் இதை சோதித்து பார்த்துவிட்டு விக்கெட் கொடுக்க மறுத்துவிட்டார். அது பேடில் மட்டும் படவில்லை. அதற்கு முன் இன்சைட் எட்ஜ் ஆகி இருக்கிறது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

இதனால் அது விக்கெட் இல்லை என்று மூன்றாவது நடுவர் கூறினார். ஆனால் பந்து பேட்டில் படுவதற்கு முன்பே காலில் பட்டது போல இருந்தது. இதையடுத்து கோலி நேராக சென்று நடுவரிடம் வாதம் செய்தார். விக்கெட் ஏன் கொடுக்கவில்லை என்று நீண்ட நேரம் கேட்டார். இதுதான் தற்போது சர்ச்சையாகி உள்ளது.

கோபம்

கோபம்

நடுவர் ஏன் இதற்கு விக்கெட் கொடுக்கவில்லை. ஏன் தொடர்ந்து நடுவர்கள் இப்படி தவறு செய்கிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஏற்கனவே ரோஹித் சர்மாவிற்கு மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் தவறான விக்கெட் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று விக்கெட் இருந்தும் விக்கெட் கொடுக்கப்படவில்லை என்று ரசிகர்கள் குமுறி இருக்கிறார்கள்.

தொடர் சர்ச்சை

தொடர் சர்ச்சை

இதேபோல் இரண்டு முறைக்கும் மேல் நடுவர்கள் இந்திய அணிக்கு எதிராக தவறு செய்து இருக்கிறார்கள். இதில் இரண்டு முறை தவறு செய்தது பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடுவர் அலீம் டெர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இன்று தவறு செய்தவரும் அவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 2, 2019, 21:53 [IST]
Other articles published on Jul 2, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+