Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கோபம்.. எதிர்பார்ப்பு.. பதற்றம்.. இந்தியா - பாக். போட்டியால் பரபரப்பில் வாராணசி.. ஏன் தெரியுமா?

லண்டன்: இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டியால் வாரணாசியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

ஒருவழியாக எல்லோரும் எதிர்பார்த்த அந்த முக்கியமான உலகக் கோப்பை போட்டி நெருங்கிவிட்டது. இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் பரபரப்பான உலகக் கோப்பை லீக் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.

இந்தியா பாகிஸ்தான் மட்டுமில்லாமல் பல்வேறு உலக நாடுகள் இன்று நடக்கும் போட்டியை கவனமாக பார்த்துக் கொண்டு இருக்கிறது. அதில் வாரணாசி அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

சிறப்பு பூஜை

சிறப்பு பூஜை

இந்தியா பாகிஸ்தான் போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று வாரணாசியில் இன்று சிறப்பு பூஜை நடந்தது. கங்கை நதியில் இந்திய அணியின் வெற்றிகாக சிறப்பு ஆரத்தி எடுக்கப்பட்டது. பின் 20 நிமிடம் மந்திரம் சொல்லி சிற்பபு பூஜை செய்யப்பட்டது. இந்திய வீரர்கள் நன்றாக விளையாட வேண்டும் என்று இந்த பூஜை நடத்தப்பட்டது.

பரபரப்பு

பரபரப்பு

அதேபோல் இன்று மதியத்திற்கு கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளதால் முக்கியமான கடைகள் எல்லாம் மதியத்திற்கு பின் இயங்காது என்று அறிவித்து இருக்கிறார்கள். இன்னும் சில சிறிய கடைகளில் மக்கள் பார்க்க வேண்டும் என்று டீவியை கடைக்கு வெளியே எடுத்து கூட வைத்து இருக்கிறார்கள். இந்த போட்டியை காண்பதற்கான சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது.

பெரிய பதற்றம்

பெரிய பதற்றம்

அதே சமயம் இந்த போட்டியில் இந்தியா தோல்வி அடைய கூடாது என்றும் வாரணாசியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் அது பெரிய அவமானமாக இருக்கும். இந்தியாவிற்கு அது தலைகுனிவாக இருக்கும் என்று வாரணாசி மக்கள் கருதுகிறார்கள். கோபத்தில் ரசிகர்கள் கலவரம் செய்ய கூட வாய்ப்புள்ளது. இதற்காகத்தான் சிறப்பு பூஜைகள் கூட செய்ததாக கூறுகிறார்கள்.

மோடி

மோடி

அதேபோல் இந்தியா வெற்றிபெற்றால் அந்த வெற்றியை மோடிக்கு சமர்பிப்போம் என்று வாரணாசி கிரிக்கெட் ரசிகர்கள் பேட்டி அளித்து இருக்கிறார்கள் . மோடியின் தேர்தல் வெற்றிக்கு பரிசாக இதை அளிக்க போகிறோம் என்று அவர்கள் கூறி வருகிறார்கள். இந்த கிரிக்கெட் போட்டியை தென்னிந்தியர்கள் பார்க்கும் அளவிற்கு உற்சாகமாக பார்க்காமல் மிகவும் பதற்றமான மனநிலையிலேயே வடஇந்தியர்கள் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, June 16, 2019, 13:16 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+