Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இதுதான் உங்களுக்கு கடைசி வாய்ப்பு.. நிரூபியுங்கள்.. முக்கிய வீரரிடம் கோலி சொன்ன வார்த்தைகள்!

Recommended Video

தொடர்ந்து சொதப்பல்... விஜய் ஷங்கருக்கு எதிராக பொங்கும் ரசிகர்கள்

லண்டன்: மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக விளையாடும் இந்திய அணியில் இன்று எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை.

மேற்கு இந்திய தீவுகள் மற்றும் இந்திய அணிகள் மோதும் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்த உலகக் கோப்பை லீக் ஆட்டம் இந்த தொடரில் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்த போட்டியில் தோல்வி அடைந்தால் மேற்கு இந்திய தீவுகள் செமி பைனலுக்கு செல்லும் வாய்ப்பை முற்றிலும் இழக்கும். இன்று எப்படியாவது இந்தியாவை வீழ்த்தி விட வேண்டும் முனைப்படும் மேற்கு இந்திய தீவுகள் ஆடி வருகிறது.

டாஸ் வென்றது

டாஸ் வென்றது

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்த போட்டி நடக்கும் ஓல்ட் டிரபோர்ட் கிரிக்கெட் மைதானம் பேட்டிங் பிட்ச் ஆகும். இதனால் முதலில் பேட்டிங் இறங்குவதன் மூலம் இந்திய அணி அதிக ரன்களை அடிக்க முடியும். இது மேற்கு இந்திய தீவுகளுக்கு நெருக்கடியாக அமையும்.

மாற்றம் இல்லை

மாற்றம் இல்லை

இந்த போட்டியில் இந்திய அணியில் மாற்றம் நடக்கும் என்றே எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் இந்தியா அதே அணியுடன் களமிறங்கவே முடிவெடுத்துள்ளது. கடந்த ஆப்கானிஸ்தான் போட்டியில் விளையாடிய அதே 11 வீரர்கள்தான் இந்திய அணியில் இந்த போட்டியிலும் விளையாடுகிறார்கள்.

எல்லாம்

எல்லாம்

இன்று விளையாடும் அணியில் கே எல் ராகுல், ரோஹித் சர்மா, கோலி, விஜய் சங்கர், தோனி, பாண்டியா, கேதார் ஜாதவ், பும்ரா, ஷமி, சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். விஜய் சங்கருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்து உள்ளது. கூடுதல் பவுலிங் ஆப்ஷன் கிடைக்கும் என்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

கடந்த இரண்டு போட்டிகளிலும் விஜய் சங்கர் சரியாக விளையாடவில்லை. ஆனாலும் கடைசி வாய்ப்பாக அவருக்கு இன்று விளையாட சான்ஸ் கிடைத்து உள்ளது. இன்று நடக்கும் போட்டியிலாவது இவர் சிறப்பாக விளையாடுவாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டிக்கு முன்பாக கோலி விஜய் சங்கரிடம் நீண்ட நேரம் தனியாக பேசிக்கொண்டு இருந்தார்.

என்ன சொன்னார்

என்ன சொன்னார்

இன்று விஜய் சங்கர்தான் 4வது வீரராக இறங்க போகிறார். இதனால் அவரிடம் கோலி உத்வேகமாக பேசி இருப்பார். பிட்சின் நிலை குறித்து பேசி இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோலி கடந்த போட்டியில் இவருக்கு பவுலிங் செய்ய வாய்ப்பு வழங்கவில்லை. இன்று இவர் பவுலிங் செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

Story first published: Thursday, June 27, 2019, 15:27 [IST]
Other articles published on Jun 27, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+