கண்டிப்பாக இது அரசியல்தான்.. அவர் எப்படி அணிக்குள் வந்தார்.. விமர்சனத்தில் சிக்கிய தமிழக வீரர்!
லண்டன்: இந்திய அணியில் விளையாடும் விஜய் சங்கருக்கு எதிராக ரசிகர்கள் தீவிரமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்திய அணி மோசமாக ஆப்கானிஸ்தான் பவுலிங்கில் திணறி வருகிறது.
கே எல் ராகுல், ரோஹித் சர்மா, விஜய் சங்கர், கோலி என்று வரிசையாக வந்த வீரர்கள் எல்ல்லோரும் அவுட்டாகி விட்டார்கள். தற்போது தோனியும், கேதார் ஜாதவும் நிதானமாக ஆடி வருகிறார்கள்.

விஜய் சங்கர்
இந்த போட்டியில் நிதானமாக ஆடிய விஜய் சங்கரும் ரஹ்மத் சூழலில் சிக்கினார். அழகாக லெக் ஸ்டம்பை நோக்கி வந்த பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். இவர் 41 பந்தில் 29 ரன்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம்
இதனால் தற்போது விஜய் சங்கருக்கு எதிராக எல்லோரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஏற்கனவே பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் வெறும் 15 பந்தில் 15 ரன்கள் மட்டும் எடுத்தார். அப்போதும் அவருக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டது. தற்போதும் இவருக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இவர் என்ன
விஜய் சங்கரை ஏன் அணிக்குள் எடுக்க வேண்டும். எதற்கு இந்திய அணிக்கு 7 பவுலர்கள். தோனிதான் பொறுமையாக ஆடுவார். அதனால் அதேபோல் பொறுமையாக ஆடும் வீரரை நாம் நான்காவது இடத்திற்கு கொண்டு வர கூடாது என்று இவர் டிவிட் செய்துள்ளார்.
மிக மோசம்
விஜய் சங்கரை தேவையில்லாமல் உயர்த்தி பேசி விட்டார்கள். அவருக்கு பெரிய திறமை இல்லை. அவருக்கு பதில் இந்திய அணியில் பண்டை கொண்டு வர வேண்டும் என்று இவர் கூறியுள்ளார்.
டியர் பிசிசிஐ
டியர் பிசிசிஐ, விஜய் சங்கரை தேர்வு செய்ததற்கு நல்ல காரணம் ஒன்று சொல்லுங்கள்.. கண்டிப்பாக இதற்கு பின் அரசியல்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
சங்கர்
விஜய் சங்கர் 11 பேர் அணியில் மட்டுமல்ல, 15 பேர் அணியில் கூட இடம்பெற கூடாது என்று இவர் டிவிட் செய்து இருக்கிறார்.


Click it and Unblock the Notifications