Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அவர் இரும்பு மாதிரி இருக்கிறார்.. சிறப்பாக ஆடுவார்.. தமிழக வீரரை இறக்கிய கோலி.. மாஸ்டர் பிளான்!

Recommended Video

WORLD CUP 2019 IND VS PAK | தலை எழுத்தை மாற்றிய விஜய் ஷங்கர், எல்லாப் புகழும் புவனேஸ்வருக்கே!

லண்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் தற்போது விஜய் சங்கர் களமிறங்க உள்ளார். தவானுக்கு பதில் இவர் களமிறங்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் இந்தியா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இரண்டு அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் போட்டி இந்த தொடரில் மிக முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிக்கு மழை அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது . அதே சமயம் தற்போது நல்ல வானிலை நிலவி வருவதால் போட்டி தொடங்க இருக்கிறது.

 டாஸ் வென்றது

டாஸ் வென்றது

இந்த போட்டியில் இந்திய அணி டாஸ் வெல்லும் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் பாகிஸ்தான் அணி டாஸ் வென்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி தற்போது பவுலிங் தேர்வு செய்து இருக்கிறது. இதனால் இந்திய அணி சற்றுநேரத்தில் பேட்டிங் இறங்க உள்ளது.

சிக்கல்

சிக்கல்

அதன்படி தவான் தற்போது காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து விலகி இருக்கிறார். காயத்தால் இவர் இரண்டு வாரங்களுக்கு விளையாட முடியாது. இதனால் இன்று அவருக்கு பதில் யார் இறங்குவார் என்ற கேள்வி நிலவி வந்தது. இந்த நிலையில் 95% அவரின் இடத்தில் கே எல் ராகுல்தான் இறங்குவார் என்று கூறப்பட்டது. தற்போது அது உறுதியாகி உள்ளது.

வருகிறார்

வருகிறார்

இந்த நிலையில் இன்று நடக்கும் போட்டியில் விஜய் சங்கருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது. 4 வது இடத்தில் களமிறங்கும் இவர் பெரும்பாலும் பவுலிங்கும் செய்வார். இதனால் பவுலிங் பேட்டிங் இரண்டிலும் பாகிஸ்தான் அணிக்கு இவர் டஃப் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்திய அணியில் மிடில் ஆர்டரில் இவர் நிரந்தமாக இடம்பெற இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.

 குழப்பம் நீக்கம்

குழப்பம் நீக்கம்

இந்த இடத்தில் விஜய் சங்கர் இறங்குவாரா அல்லது தினேஷ் கார்த்திக் இறங்குவாரா என்பற்று குழப்பம் நிலவி வந்தது. தற்போது குழப்பம் தீர்ந்து இருக்கிறது. இதுகுறித்து விராட் கோலி பேட்டி அளித்த போது, விஜய் சங்கர் மிகவும் உறுதியான வலிமையான வீரர். அவர் தன்னை இன்று நிரூபிப்பார் என்று கூறியுள்ளார்.

Story first published: Sunday, June 16, 2019, 14:57 [IST]
Other articles published on Jun 16, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+